மூடு

அனைத்து வகையான அமைப்பு சாரா தொழிலாளர்களின் விபரங்களை ஒருங்கிணைத்து e-SHRAM/NDUW Portal என்ற இணையதளம் வாயிலாக பதிவுகள் மேற்கொள்ளபடும் – மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன் இ.ஆ.ப அவர்கள் தகவல்.

வெளியிடப்பட்ட தேதி : 21/09/2021

செ.வெ.எண்:-38/2021

நாள்: 21.09.2021

திண்டுக்கல் மாவட்டம்

அனைத்து வகையான அமைப்பு சாரா தொழிலாளர்களின் விபரங்களை ஒருங்கிணைத்து e-SHRAM/NDUW Portal என்ற இணையதளம் வாயிலாக பதிவுகள் மேற்கொள்ளபடும் – மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன் இ.ஆ.ப அவர்கள் தகவல்

மத்திய அரசின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் தேசிய தரவு அடிப்படையில் அனைத்து வகையான அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு இணையதளம் e-SHRAM/NDUW Portal வாயிலாக பதிவுகள் மேற்கொள்ள மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர் ச.விசாகன் இ.ஆ.ப அவர்களின் தலைமையில் மாவட்ட செயல்படுத்துதல் குழு (District Level Implementation committee) ஏற்படுத்தப்பட்டு முதல் நிலை கூட்டம் நடைபெற்றது இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தெரிவித்தாவது:-

அனைத்து வகையான அமைப்புசாரா தொழிலாளர்கள், கட்டுமான தொழிலாளர்கள், செங்கல் சூளை, வெளி மாநில தொழிலாளர்கள், வீட்டுப்பணி தொழிலாளர்கள், விவசாய தொழிலாளர்கள், சுயவேலை வாய்ப்பு தொழிலாளர்கள், தெரு வியாபாரிகள், அங்கன்வாடி பணியாளர்கள், மீனவர்கள், அமைப்புசாரா தோட்டத் தொழிலாளர்கள், பால் வியாபாரிகள் மற்றும் இது போன்ற பிற அமைப்புசாரா தொழிலாளர்கள் விவரங்களை ஒருங்கிணைத்து e-SHRAM/NDUW Portal -இல் மாவட்ட செயல்படுத்துதல் குழுவில் உள்ள தொடர்புடைய துறை அலுவலர்களின் புள்ளி விவரங்களை, செயல்படுத்துதல் குழுவிற்கான பொறுப்பு அதிகாரியான (Nodel officer) திரு.ஊ.ராம்ராஜ், தொழிலாளர் உதவி ஆணையருக்கு (அமலாக்கம்) தினசரி அறிக்கை அனுப்பி பொது சேவை மையத்தில் உள்ள களப்பணியாளர்கள் கொண்டு பதிவுகள் மேற்கொண்டும் ESI,PF திட்டத்தின் கீழ் பயன்பெறாத அமைப்புசாரா தொழிலாளர்கள், அடையாள அட்டை பெற்று இந்த திட்டத்தின் மூலம் பயன் பெறலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) திரு.ராஜசேகரன், உதவி இயக்குனர் ஊராட்சிகள் திரு.ரெங்கராஜன், மாவட்ட தொழில் மையம் திரு.மருதப்பன் (பொது மேலாளர்), மாவட்ட சமூக நல அலுவலர் திருமதி.புஷ்பகலா, முதன்மை கல்வி அலுவலர் திரு.கருப்பசாமி, மாவட்ட பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அலுவலர் திருமதி.மினாட்சி மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.