மூடு

அரசு கைத்தறி கண்காட்சியினை மாண்புமிகு வனத்துறை அமைச்சர் திரு.திண்டுக்கல் சி.சீனிவாசன் அவர்கள் திறந்து வைத்தார்.

வெளியிடப்பட்ட தேதி : 10/10/2019
1

செ.வெ.எண்:-20/2019 நாள்:10.10.2019

திண்டுக்கல் மாவட்டம்

அரசு கைத்தறி கண்காட்சியினை மாண்புமிகு வனத்துறை அமைச்சர் திரு.திண்டுக்கல் சி.சீனிவாசன் அவர்கள் திறந்து வைத்தார்.

மாண்புமிகு வனத்துறை அமைச்சர் திரு திண்டுக்கல் சி.சீனிவாசன் அவர்கள் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மு.விஜயலட்சுமி,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், திண்டுக்கல் நகரில், அருள்மிகு கோட்டை மாரியம்மன் திருக்கோவில் திருமண மண்டபத்தில் கைத்தறி மற்றும் துணிநூல்துறையின் சார்பில் அமைக்கப்பட்டியிருந்த அரசு கைத்தறி கண்காட்சியினை இன்று (10.10.2019) திறந்து வைத்தார். இவ்விழாவில் மாண்புமிகு வனத்துறை அமைச்சர் திரு.திண்டுக்கல் சி.சீனிவாசன் அவர்கள் பேசும்போது தெரிவிக்கையில்:-

வரும் தீபாவளி – 2019 பண்டிகையை முன்னிட்டு கைத்தறி நெசவாளர்களுக்கு கூட்டுறவு சங்கங்களில் உற்பத்தி செய்யப்படும் ஜவுளி ரகங்களை விற்பனை செய்யும் நோக்கத்துடன் தமிழகத்தில் முக்கிய இடங்களில் அரசின் நிதியுதவியுடன் சிறப்பு கைத்தறி சிறப்பு கண்காட்சி (Spcial Hand loom Expo) நடத்தப்படுகிறது. அதன்படி, திண்டுக்கல் மாநகரில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீகோட்டை மாரியம்மன் திருக்கோவில் திருமண மண்டபத்தில் 10.10.2019 முதல் 24.10.2019 வரை சிறப்பு கைத்தறி விற்பனை கண்காட்சி நடைபெறவுள்ளது. இக்கண்காட்சி தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் குறிப்பாக கோவை, ஈரோடு, சேலம், கரூர், திருச்சி, கும்பகோணம், காஞ்சிபுரம், கடலூர், பரமக்குடி, மதுரை, விருதுநகர், நாகர்கோவில், திருநெல்வேலி மற்றும் திண்டுக்கல் பகுதியில் உள்ள கைத்தறி நெசவாளர்களால் உற்பத்தி செய்யப்பட்ட பட்டு மற்றும் மென்பட்டு சேலைகள், பெட்சீட்கள், ஜாக்கார்டு மற்றும் பிளைன் போர்வைகள், அலங்கார விரிப்புகள், பருத்திரக சேலைகள், ஆர்கானிக் ரக சேலைகள், கோர சேலைகள், வேட்டிகள், துண்டுகள், லுங்கிகள், ஜமுக்காளம் மற்றும் அனைத்து கைத்தறி ரக ஆடைகள் வழங்கும் 30 சதவீத தள்ளுபடியுடன் விற்பனை செய்யப்படவுள்ளது. இக்கண்காட்சியில் 30-க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

இக்கண்காட்சியில் தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் இயங்கி வரும் நெசவாளர் கூட்டுறவு சங்கங்களுக்கு அரங்குகள் அமைத்து சங்கங்கள் மூலம் உற்பத்தி செய்யப்படும் ஜவுளி ரகங்களை விற்பனை செய்யப்படவுள்ளன. தற்போழுது நடைபெறும் இச்சிறப்பு கண்காட்சியில் சுமார் ரூ.50 இலட்சத்திற்கு மேல் விற்பனை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இக்கண்காட்சியில் விற்பனை செய்யப்படும் அனைத்து பருத்தி மற்றும் பட்டு துணிகளுக்கு 30 சதவீத அரசு தள்ளுபடி வழங்கப்படுகிறது. கைத்தறி நெசவாளர்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்துகின்ற வகையில் பொதுமக்கள் அனைவரும் கைத்தறி துணிகளை வாங்கி பயனடையுமாறு மாண்புமிகு வனத்துறை அமைச்சர் திரு.திண்டுக்கல் சி.சீனிவாசன் அவர்கள் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் வி.பி.பி.பரமசிவம் அவர்கள், மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் திரு.வி.மருதராஜ் அவர்கள், தலைவர் நல்லமநாயக்கன்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் திரு.அ.ஜெயசீலன், கைத்தறி மற்றும் துணிநூல்துறை உதவி இயக்குநர் திரு.ஆனந்தன் மற்றும் கைத்தறி நெவசாளர்கள் கூட்டுறவு சங்கத்தினை சார்ந்த நெசவாளர்கள் ஏராளமானோர்கள் கலந்து கொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.