மூடு

அரவை கொப்பரைக்கான குறைந்தபட்ச ஆதார விலை குவிண்டாலுக்கு ரூ.10,590/-வீதம் நிர்ணயம் செய்து, பழனி, நத்தம், வத்தலக்குண்டு ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் கொப்பரை கொள்முதல் செய்யப்படுகிறது

வெளியிடப்பட்ட தேதி : 04/02/2022

செ.வெ.எண்:-08/2022

நாள்:-04.02.2022

அரவை கொப்பரைக்கான குறைந்தபட்ச ஆதார விலை குவிண்டாலுக்கு ரூ.10,590/-வீதம் நிர்ணயம் செய்து, பழனி, நத்தம், வத்தலக்குண்டு ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் கொப்பரை கொள்முதல் செய்யப்படுகிறது – மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

திண்டுக்கல் மாவட்டத்தில் தென்னையானது 30,498 ஹெக்டேர் அளவில் பயிரிடப்பட்டு வருகிறது. அதில் 35,89,23,625 தேங்காய் உற்பத்தி செய்யப்பட்டு 3,40,977 மெ.டன் விற்பனை உபரி ஏற்படுகிறது. தற்போது தேங்காய் பருப்பின் வெளிச்சந்தையின் விலையானது குவிண்டால் ஒன்றுக்கு தொகை ரூ.8,800/- முதல் ரூ.9,000/- வரை நிலவி வருகிறது.

வெளிச்சந்தை விலையானது மத்திய அரசால் அவ்வப்போது நிர்ணயம் செய்யப்பட்டு வரும் குறைந்தபட்ச ஆதார விலையை விட குறைவாக இருப்பதால் தமிழ்நாடு அரசு, மத்திய அரசின் உதவியுடன் தென்னை அதிகம் பயிரிடக்கூடிய 20 மாவட்டங்களில் அரவை கொப்பரைக்கான குறைந்தபட்ச ஆதார விலையான குவிண்டால் ஒன்றுக்கு ரூ.10,590/-வீதம் நிர்ணயம் செய்து கொள்முதல் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் திண்டுக்கல் மாவட்டத்தில் கீழ்க்காணும் ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்கள் மூலம்; 02.02.2022 முதல் 31.07.2022 முடியவுள்ள காலங்களில் கொள்முதல் செய்திட தமிழக அரசால் ஆணையிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக கீழ்க்காணும் அலுவவலர்களை தொடர்பு கொள்ள கேட்டுக்கொள்ளப்பெறுகிறது.

வ.எண் விற்பனைக்கூடம் / கொள்முதல் மையம்
1. விற்பனைக்கூட கண்காணிப்பாளர், ஒழுங்குமுறை விற்பனைக்கூடம், பழனி, அலைபேசி எண் : 89460-99709
2. மேற்பார்வையாளர், ஒழுங்குமுறை விற்பனைக்கூடம், நத்தம்
அலைபேசி எண் : 80566-97891
3. மேற்பார்வையாளர், ஒழுங்குமுறை விற்பனைக்கூடம், வத்தலக்குண்டு
அலைபேசி எண் : 99763-84996

மேற்படி, கொள்முதலுக்கு அரவை கொப்பரை கொண்டு வரும் விவசாயிகள் நில உரிமைக்கான அசல் சிட்டா, அடங்கல், ஆதார் அட்டை, கடவுச்சீட்டு அளவுள்ள புகைப்படம் மற்றும் வங்கி கணக்கு புத்தகத்தின் நகல்களை கொள்முதல் மையங்களில் சமர்ப்பிக்க வேண்டும். மேற்படி கொள்முதலுக்கான தொகை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும். எனவே விவசாயிகள் மேற்படி கொள்முதல் மையங்களில் பதிவு செய்து இந்த வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.