ஆத்துார் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளை, மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.

செ.வெ.எண்:-41/2025
நாள்:-12.04.2025
திண்டுக்கல் மாவட்டம்
ஆத்துார் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளை, மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.
திண்டுக்கல் மாவட்டம், ஆத்துார் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளை, மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் இன்று(12.04.2025) நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.
திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் ஊராட்சி ஒன்றியம், ஆலமரத்துப்பட்டி ஊராட்சியில் ரூ.22.00 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் பொது நூலக கட்டடத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள்
அதனைத் தொடர்ந்து, வக்கம்பட்டி ஊராட்சியில் ஊரக வீடுகள் சீரமைப்புத் திட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பின்னர் சீவல்சரகு ஊராட்சிக்குட்பட்ட ஆதிலட்சுமிபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ரூ.34.85 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் இரண்டு வகுப்பறை கொண்ட கட்டடத்தை பார்வையிட்டார். அதனைத் தொடர்ந்து, அக்கரைப்பட்டி ஊராட்சியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.8.00 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் பயணிகள் நிழற்குடை மற்றும் அக்கரைப்பட்டியில் பிரதம மந்திரி கிராம சாலை திட்டத்தில் ரூ.2.45 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் சாலை மேம்பாட்டு பணிகள் ஆகியவற்றை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
தொடர்ந்து, ஆத்துாரில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம் சார்பில் செயல்பட்டு வரும் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பின்னர் நெல் கொள்முதல் தொடர்பாக அங்கிருந்த விவசாயிகளுடன் கலந்துரையாடினார்.
அதனைத் தொடர்ந்து, மணலூர் ஊராட்சி, புல்லாவெளி கிராமத்தில் குடகனாறு ஆற்றின் குறுக்கே ரூ.8.12 கோடி மதிப்பீட்டில் பாலம் அமைப்பதற்கான பணிகள் மற்றும் புல்லாவெளி அருவி பகுதியில் ரூ.3.25 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் சுற்றுலா மேம்பாட்டு பணிகள் ஆகியவற்றை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் சித்தரேவு ஊராட்சியில் முதலமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.13.60 கோடி மதிப்பீட்டில் மருதாநதி வடக்கு கால்வாய் சாலை மேம்பாட்டுப் பணிகள் மற்றும் சித்தரேவு சோதனைச்சாவடியில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின்போது, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திரு.தட்சணாமூர்த்தி, திருமதி அருள்கலாவதி உட்பட துறை அலுவலர்கள் உடனிருந்தனர்கள்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.

.

.

.