மூடு

ஆத்தூர் காமராஜர் நீர்தேக்க அணை மற்றும் பல்வேறு திட்டப்பணிகளை – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ச.விசாகன்,இ.ஆ.ப., அவர்கள் ஆய்வு செய்தார்.

வெளியிடப்பட்ட தேதி : 25/06/2021
.

செ.வெ.எண்:-28/2021

நாள்: 23.06.2021

திண்டுக்கல் மாவட்டம்

ஆத்தூர் காமராஜர் நீர்தேக்க அணை மற்றும் பல்வேறு திட்டப்பணிகளை – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ச.விசாகன்,இ.ஆ.ப., அவர்கள் ஆய்வு செய்தார்.

திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் காமராஜர் நீர்தேக்க அணை மற்றும் பல்வேறு திட்டப்பணிகளை இன்று (23.06.2021) மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ச.விசாகன்,இ.ஆ.ப. அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்.

ஆத்தூர் காமராஜர் நீர்தேக்க அணையின் நீரின் மொத்த கொள்ளளவு, குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரத்தின் செயல்பாடு மற்றும் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வரும் தினசரி குடிநீர் தேவையின் அளவு, நீர் தேக்க அணையின் பராமரிப்பு பணிகள் மற்றும் விரிவாக்கம் குறித்து திண்டுக்கல் மாநகராட்சி ஆணையர் அவர்களிடம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கேட்டறிந்தார். பொதுமக்களுக்கு ஆத்தூர் நீர் தேக்கத்திலிருந்து தடையின்றி குடிநீர் செல்வதை தொடர்ந்து ஆய்வு மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

மேலும்,ஆத்தூர் அரசு மருத்துவமனையினை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள், பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்தும், மருத்துவமனை வளாகங்கள் மற்றும் வார்டுகளில் கிருமி நாசினி தெளித்து நோய் பரவாத வண்ணம் தூய்மையாக வைத்திருக்கவும், கொரோனா பரவலை கட்டுப்படுத்த தினசரி தூய்மைப்பணிகளை மேற்கொள்ள மருத்துவ அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

இதனை தொடர்ந்து, ஆத்தூரில் விவசாயிகள் பயன்பெறும் வகையில் தேசிய நீடித்த நிலையான வேளாண்மை இயக்கம் மண் மாதிரி சேகரித்தல் பணிகளை ஆய்வு செய்து விவசாயிகளுக்கு அரசின் திட்டங்கள் குறித்து விழிப்புணர்வினை ஏற்படுத்தி அரசின் திட்டங்களில் பயன்பெறுவதற்கு வேளாண்மை அலுவலர்கள் நடவடிக்கை மேற்கொள்ளமாறு திண்டுக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் திரு.ச.விசாகன்,இ.ஆ.ப அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வின்போது, உதவி ஆட்சியர் பயிற்சி திருமதி பிரியங்கா.இ,ஆ.ப., திண்டுக்கல் மாநகராட்சி ஆணையாளர் திரு.பாலசுப்பிரமணியம், இணை இயக்குநர் (நலப்பணிகள்) மரு.சிவக்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திரு.லாரன்ஸ், திரு.தட்சிணாமூர்த்தி அலுவலர்கள் உட்பட பலர் உடனிருந்தனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்