மூடு

இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி திண்டுக்கல் மாவட்ட கிளை ஆண்டு பொதுக்குழுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் மாவட்ட ரெட்கிராஸ் சொசைட்டி தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப.,அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

வெளியிடப்பட்ட தேதி : 25/08/2021
.

செ.வெ.எண்:-53/2021

நாள்:-24.08.2021

திண்டுக்கல் மாவட்டம்

இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி திண்டுக்கல் மாவட்ட கிளை ஆண்டு பொதுக்குழுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் மாவட்ட ரெட்கிராஸ் சொசைட்டி தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப.,அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி திண்டுக்கல் மாவட்ட கிளை ஆண்டு பொதுக்குழுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் மாவட்ட ரெட்கிராஸ் சொசைட்டி தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று(24.08.2021) நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக மாவட்ட வன அலுவலர் திரு.எஸ்.பிரபு, இ.வ.ப., கலந்துகொண்டார்.

இக்கூட்டத்தில், இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி திண்டுக்கல் மாவட்ட கிளை செயலாளர் திரு.ஏ.ராஜகுரு 2020-2021 ஆண்டறிக்கையை வாசித்தார். பொருளாளர் திருமதி ஆ.சுசிலாமேரி வரவு-செலவு தணிக்கை அறிக்கையை தாக்கல் செய்தார்.

2021-2024-ஆம் ஆண்டிற்கான அவைத்தலைவர் மற்றும் செயற்குழு தேர்வு செய்யப்பட்டது. மாவட்ட அவைத்தலைவராக திரு.என்.எம்.பி.காஜாமைதீன், துணைத்தலைவர்களாக திரு.எம்.சரவணன், மரு.ஆசைத்தம்பி, துணை அவைத்தலைவர்களாக திரு.என்.சேக்தாவுது, திரு.பி.ஜோதிமுருகன், திரு.ஏ.ராஜகுரு, செயலாளராக திரு.எம்.ஏ.சையது அபுதாகீர், பொருளாளராக திருமதி ஆ.சுசிலாமேரி, கௌரவ பொருளாளராக திரு.ஏ.மணிவண்ணன், தணிக்கையாளர்களாக திரு.சி.ஏ.கே.அய்யனார், திரு.வி.கார்த்திகேயன், இணைச் செயலாளர்களாக திரு.சின்ராஜ், திரு.ஹெரால்டுஜாக்சன், திரு.ராஜாவர்மன், திரு.ராசையா, திரு.ஜெபராஜ், மாநில பொதுக்குழு உறுப்பினர்களாக திரு.ஆறுமுகம், திரு.ஜீவராஜ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். புதிய நிர்வாகிகளுக்கான அங்கீகாரத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் மாவட்ட ரெட்கிராஸ் சொசைட்டி தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்கள்.

இதனைத்தொடர்ந்து 2021-2022-ஆம் ஆண்டிற்கான உத்தேச வரவு-செலவு திட்டம் தாக்கல் செய்யப்பட்டது. இக்கூட்டத்தில் இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி திண்டுக்கல் மாவட்ட கிளை நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.