மூடு

இந்தியா முழுவதும் தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை சிறப்பு முகாம்

வெளியிடப்பட்ட தேதி : 29/07/2019

செ.வெ.எண்:74/2019 நாள்:-27.07.2019

திண்டுக்கல் மாவட்டம் பத்திரிக்கை செய்தி

மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரம் அளிப்புதுறையினால் மாற்றுத்திறனாளிகளுக்கு இந்தியா முழுவதும் தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை (UDID) வழங்கப்பட்டு வருகிறது. மேற்படி தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை பெறுவதற்கு மாற்றுத்திறனாளிகளின் விபரங்களை இணையதளத்தில் பதிவுச் செய்ய வேண்டும். அவ்வாறு பதிவுச் செய்வதற்களுக்கு தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை அவர்களின் இல்லங்களுக்கு அனுப்பப்பட்டு வருகிறது.

இதுநாள் வரை தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை பெறாத மாற்றுத்திறனாளிகளிடமிருந்து விண்ணப்பங்களை பெறுவதற்காக ஒன்றியம் வாரியாக சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் முதல் கட்டமாக கீழ்கண்டவாறு 5 ஒன்றியங்களில் தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை பெறபதிவு செய்வதற்கான சிறப்பு முகாம் காலை 9.30 மணி முதல் 2.00 மணி வரை நடைபெற உள்ளது.

தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டைபெற சிறப்பு முகாம்:

நாள் முகாம் நடைபெறும் இடம்
01.08.2019 மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம்,திண்டுக்கல். திண்டுக்கல் ஒன்றியத்தினைச் சேர்ந்த அனைத்து கிராமங்கள்
02.08.2019 ஊராட்சி ஒன்றிய அலுவலகம் சாணர்ப்பட்டி சாணர்ப்பட்டி ஒன்றியத்தினைச் சேர்ந்த அனைத்து கிராமங்கள்
03.08.2019 ஊராட்சி ஒன்றிய அலுவலகம் நத்தம் நத்தம் ஒன்றியத்தினைச் சேர்ந்த அனைத்து கிராமங்கள்/பேருராட்சி பகுதிகள்
06.08.2019 ஊராட்சி ஒன்றிய அலுவலகம் ரெட்டியார்சத்திரம் ரெட்டியார்சத்திரம் ஒன்றியத்தினைச் சேர்ந்த அனைத்து கிராமங்கள்/பேருராட்சி பகுதிகள்
08.08.2019 ஊராட்சி ஒன்றிய அலுவலகம் பழனி புழனி நகராட்சி மற்றும் பழநி ஒன்றியத்தினைச் சேர்ந்த அனைத்து கிராமங்கள்/பேருராட்சி பகுதிகள்

தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டைபெற இதுநாள்வரை விண்ணப்பிக்காத மாற்றுத்திறனாளிகள் தங்கள் ஒன்றியத்தில் நடைபெறும் சிறப்பு முகாமிற்கு பெற்றோர்/பாதுகாவலர் மட்டும் கீழ்கண்ட ஆவனங்களுடன் வந்து விண்ணப்பிக்கலாம்.

மாற்றுத்திறனாளிகள் கொண்டுவரவேண்டியஆவனங்கள்:
1. மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாளஅட்டை மருத்துவ சான்றுடன் கூடியது அசல் மற்றும் நகல்.
2. ரேசன் கார்டு அட்டை அசல் மற்றும் நகல்.
3. ஆதார் அட்டை அசல் மற்றும் நகல்.
4. அண்மையில் எடுக்கப்பட்ட மார்பளவு பாஸ்போர்ட்; அளவு புகைப்படம்-2 மற்றும் மாற்றுத்திறனாளியின் கையொப்பம்/கைரேகை ஆகியவற்றுடன் பெற்றோர்/பாதுகாவலர் மட்டும் வரவேண்டும்.

மேலும் தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை சம்பந்தமான சந்தேகங்களுக்கு திண்டுக்கல் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலக தொலைபேசி எண் 0451-246099ல் தொடர்புகொள்ளலாம். திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டைபெற, பதிவு செய்வதற்காக நடைபெறும் சிறப்பு முகாமில் மேற்கூறிய அனைத்து ஆவணங்களுடன் பெற்றோர்/பாதுகாவலர் மட்டும் வந்து கலந்துகொண்டு விண்ணப்பித்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.மு.விஜயலட்சுமி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்