மூடு

இந்தியா முழுவதும் நீர் மேலாண்மையை மேம்படுத்துவது குறித்து 254 மாவட்டங்களில் 1500 வட்டாரங்களில் பல்வேறு மத்திய குழுவினர் ஆய்வு மேற்கொள்ள உள்ளனர் – மத்திய அரசு அணுசக்தி துறை, இணைச் செயலாளர் டாக்டர்.எஸ்.மெர்வின் அலெக்ஸாண்டர் அவர்கள் தகவல்

வெளியிடப்பட்ட தேதி : 12/07/2019
1

3 2

செ.வெ.எண்:-35/2019 நாள்:- 11.07.2019

திண்டுக்கல் மாவட்டம்

திண்டுக்கல் மாவட்டத்தில் நீர் மேலாண்மை (JAL SAKTHI ABIYAN) குறித்து மத்திய குழுவினர் ஆய்வு.

இந்தியா முழுவதும் நீர் மேலாண்மையை மேம்படுத்துவது குறித்து 254 மாவட்டங்களில் 1500 வட்டாரங்களில் பல்வேறு மத்திய குழுவினர் ஆய்வு மேற்கொள்ள உள்ளனர் – மத்திய அரசு அணுசக்தி துறை, இணைச் செயலாளர் டாக்டர்.எஸ்.மெர்வின் அலெக்ஸாண்டர் அவர்கள் தகவல்

திண்டுக்கல் மாவட்டத்தில் நீர் மேலாண்மை (JAL SAKTHI ABIYAN)-2019 இயக்கம் குறித்து ஆய்வு மேற்கொள்ள மத்திய அரசு அணுசக்தி துறை, இணைச் செயலாளர் டாக்டர்.எஸ்.மெர்வின் அலெக்ஸாண்டர் அவர்கள் தலைமையில் 14 அலுவலர்கள் வருகை தந்துள்ளனர்.

இக்குழுவினர் திண்டுக்கல் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கௌ;ளப்படுவதற்கு முன்னதாக, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (11.07.2019) மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் நீர் மேலாண்மை (JAL SAKTHI ABIYAN)-2019 இயக்கம் தொடர்பாக, மாவட்ட அளவிலான பல்துறை அலுவலர்களுடனான கலந்துரையாடல் கூட்டம் ஆட்சித்தலைவர் திருமதி.மு.விஜயலட்சுமி,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் மத்திய அரசு அணுசக்தி துறை, இணைச் செயலாளர் டாக்டர்.எஸ்.மெர்வின் அலெக்ஸாண்டர் அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மத்திய அரசு அணுசக்தி துறை, இணைச் செயலாளர் அவர்கள் தெரிவித்ததாவது:-

மாண்புமிகு பாரத பிரதமர் அவர்களின் நீர் சேமிப்பு முக்கியத்துவம் குறித்து (துயுடு ளுயுமுவுர்ஐ யுடீஐலுயுN) ஓரு இயக்கமாக அறிவித்து (JAL SAKTHI ABIYAN) பொதுமக்கள் பங்களிப்புடன் மழைநீர் சேகரிப்பினை மேற்கொள்ளவும் அதன்படி, 01.07.2019 முதல் நீர்மேலாண்மை இயக்கம் கீழ்க்கண்ட குறிக்கோள்களை அடையும் வகையில் செயல்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, அனைத்து கட்டிடங்களிலும் மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் ஏற்படுத்துதல், ஏற்கனவே அமைக்கப்பட்டிருப்பின், அவைகளை பழுது சரி செய்து பயன்பாட்டிற்கு கொண்டு வருதல் மற்றும் பாரம்பரிய நீர்நிலைகளை பராமரிப்பு செய்தல் மற்றும் பயன்படுத்திய நீரை, மறு சுழற்சி செய்தும், பூமிக்கடியில் சேமித்தும் சுத்திகரித்தும் மறுபயன்பாட்டிற்கு கொண்டு வருதல் மற்றும் புதிய குளங்கள் அமைத்தல் மற்றும் மரக்கன்றுகள் நட்டு பராமரித்தல் உள்ளிட்ட குறிக்கோள்கள் தொடர்பாக, ஆய்வுக் கூட்டம் மற்றும் தள ஆய்வு செய்வதற்கு, திண்டுக்கல் மாவட்டத்திற்கு 7 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவில் உறுப்பினர்களாக திரு.டி.பிரவீன், திரு.எஸ்.சி.ஸ்ரீவஸ்தவா, திரு.சுனீல்குமார், திரு.அமித்சரன், திரு.ஜீ.சீனிவாசன், திருமதி.பூர்ணிமா மற்றும் தொழில்நுட்ப அலுவலர்களாக திரு.சத்திமுருகன், திரு.சுக்தேவ்சிங், திரு.ராம்ஆனந்த், திரு.எம்.ராஜா, திரு.ராம்பாபு, திரு.சச்சின் குப்தா, திரு.டி.எஸ்.சாஸ்கர் ஆகியோர் உள்ளனர்.

மேலும், இந்தியா முழுவதும் நீர் மேலாண்மையை மேம்படுத்துவது குறித்து 254 மாவட்டங்களில் 1500 வட்டாரங்களில் பல்வேறு மத்திய குழுவினர் ஆய்வு மேற்கொள்ள உள்ளனர். ஒவ்வொரு குழுவிற்கும் மத்திய அரசின் இயக்குநர் ஃ துணைச் செயலாளர் நிலையிலுள்ள அலுவலர் ஒருவரை வட்டார பற்றாளாராகவும் மற்றும் தொழில் நுட்ப அலுவலர் ஒருவரையும் நியமனம் செய்யப்பட்டுள்ளது.

இக்குழுவினர், திண்டுக்கல் மாவட்டத்தில்; குடிநீர் தேவை உள்ள கிராமங்கள் மற்றும் நிலத்தடி நீர் அதிக ஆழத்திற்கு சென்ற கிராமங்கள் எண் 28 குறு வட்டங்களில் (Firka) 225 கிராமங்கள் கண்டறியப்பட்டு, 11.07.2019 முதல் 13.07.2019 வரை தள ஆய்வு மேற்கொள்ள உள்ளனர். மேலும், மழைநீர் சேகரிப்பு, நீர்ப்பாதுகாப்பு மற்றும் நீர் மேலாண்மை குறித்து பொதுமக்களிடம் போதுமான விழிப்புணர்வு ஏற்படுத்திடவும், எதிர்வரும் பருவகாலத்திற்கு முன்பாகவே மழைநீர் சேகரிப்பு, நீர் பாதுகாப்பு குறித்து உரிய பணிகளை 31.08.2019-க்குள் முடிக்க குறிக்கோளாக கொண்டு திட்டமிடப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நீர் மேலாண்மை தொடர்பாக அலுவலர்கள் எதிர் கொள்ளும் பிரச்சனைகள் தொடர்பாக இன்றைய தினம் விவாதிக்கப்பட்டு, அதில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மாநகராட்சி, நகராட்சி ஆணையாளர்கள், வட்டார வளர்ச்சி அலுவலகர்கள் மற்றும் செயல் அலுவலர்கள் ஆகியோர்களுடன் அந்தந்த பகுதிகளில்

பொதுமக்களின் குடிநீர் தேவைகள் குறித்தும் மற்றும் நீர் மேலாண்மை குறித்தும் இக்கலந்துரையாடல் கூட்டத்தில் கேட்டறியப்பட்டது.

இதனை தொடர்ந்து, இக்குழுவினர் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் 7குழுவாக பிரிந்து சென்று சம்மந்தப்பட்ட அலுவலர்களுடன் நீர் மேலாண்மை குறித்து களஆய்வு மேற்கொள்ள உள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் இன்றைய தினம் தொடங்கப்பட்டுள்ள இப்பணி தொடர்ந்து 3 நாட்களாக நடைபெறவுள்ளது.

இந்த ஆய்விற்குபின் திண்டுக்கல் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய நீர் மேலாண்மை பணிகள் குறித்து அரசிற்கு அறிக்கையாக சமர்பித்து பணிகள் மேற்கொள்ளப்படும். மேலும், நீர் மேலாண்மை தொடர்பாக அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் தங்களது பங்களிப்பையும் ஏற்படுத்தி முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு மத்திய அரசு அணுசக்தி துறை, இணைச் செயலாளர் டாக்டர்.எஸ்.மெர்வின் அலெக்ஸாண்டர் அவர்கள் தெரிவித்தார்.

முன்னதாக, மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நீர் மேலாண்மை (JAL SAKTHI ABIYAN)-2019 இயக்கம் தொடர்பாக மழை நீர் சேகரிப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி மற்றும் விழிப்புணர்வு வாகனம் ஆட்சித்தலைவர் திருமதி.மு.விஜயலட்சுமி,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், மத்திய அரசு அணுசக்தி துறை, இணைச் செயலாளர் டாக்டர்.எஸ்.மெர்வின் அலெக்ஸாண்டர் அவர்கள் மற்றும் குழுவினரால் தொடங்கி வைக்கப்பட்டது.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.பா.வேலு, திட்ட இயக்குநர் (மா.ஊ.வ.மு) திருமதி.மு.கவிதா, மாவட்ட ஆட்சியர் நேர்முக உதவியாளர் (பொது)திரு.ஆர்.ராஜ்குமார் மற்றும் மாநகராட்சி, நகராட்சி ஆணையாளர்கள், வட்டார வளர்ச்சி அலுவலகர்கள் மற்றும் செயல் அலுவலர்கள் உள்ளிட்ட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்