மூடு

இலவசமாக கோடை உழவு செய்ய விரும்பும் சிறுகுறு விவசாயிகள் டாஃபே (TAFE) நிறுவனத்தினை தொடர்புகொள்ளலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மு.விஜயலட்சுமி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

வெளியிடப்பட்ட தேதி : 22/04/2020

செ.வெ.எண்:-54/2020 நாள்:22.04.2020
திண்டுக்கல் மாவட்டம்

இலவசமாக கோடை உழவு செய்ய விரும்பும் சிறுகுறு விவசாயிகள் டாஃபே (TAFE) நிறுவனத்தினை தொடர்புகொள்ளலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மு.விஜயலட்சுமி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

————————————————————————————————————————————-

திண்டுக்கல் மாவட்டத்தில் கோடை உழவு செய்ய விரும்பும் விவசாயிகள் தற்போது கொரோனா வைரஸ் தொற்று காரணமாக சமூக இடைவெளியினை கடைப்பிடிக்க வேண்டியுள்ளதால், இதில் ஏற்படும் இடர்பாடினை தவிர்த்திடும் வகையில் விவசாய பெருமக்கள் தங்களது நிலங்களில் உழவு செய்திட மாவட்ட நிர்வாகத்தின் வழிகாட்டுதலின்படி டாஃபே நிறுவனம் 5 ஏக்கர் நிலங்களுக்கு குறைவாக உள்ள சிறுகுறு விவசாயிகளுக்கு டிராக்டர் மூலம் இலவசமாக கோடை உழவு செய்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதன்படி, தற்போது வரை நத்தம், செந்துறை, மணக்காட்டூர் மற்றும் வடமதுரை ஆகிய பகுதிகளில் சுமார் 1,200 ஏக்கருக்கும் மேற்பட்ட நிலங்கள் இலவசமாக கோடை உழவு செய்யப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின்கீழ் பயன்பெற விரும்பும் விவசாயிகள் தங்களது நிலம் குறித்த ஆவணங்களுடன் டாஃபே நிறுவன கள அலுவலர் திரு.பொன்பாண்டியன் அவர்களை 8438117414 என்ற கைப்பேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். மேலும், பசுமை செந்துறை தொண்டு நிறுவன முதன்மையாளர் திரு.அரசுகண்ணன் அவர்களை 9843388972 என்ற கைப்பேசி எண்ணில் தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.

மேலும் விபரங்களுக்கு, வேளாண்மை துணை இயக்குநர் திரு.ரவிபாரதி (9442542894), வேளாண்மை அலுவலர் திரு.ஜெயக்குமார் (9677322049) ஆகியோரை தொடர்புகொண்டு விபரங்களை அறிந்துகொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மு.விஜயலட்சுமி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

—————————————————————————————————————————————————————————————-
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.
—————————————————————————————————————————————————————————————-