மூடு

இலவச விவசாய மின் இணைப்பு பெற்று பயனடைந்த விவசாயிகளுடன் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் கலந்துரையாடல் நிகழ்ச்சி.

வெளியிடப்பட்ட தேதி : 18/04/2022
.

செ.வெ.எண்:-40/2022

நாள்:16.04.2022

திண்டுக்கல் மாவட்டம்

இலவச விவசாய மின் இணைப்பு பெற்று பயனடைந்த விவசாயிகளுடன் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் கலந்துரையாடல் நிகழ்ச்சி

மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி, அவர்கள், மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி, அவர்கள், மாண்புமிகு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு.சி.வி.கணேசன், அவர்கள் மற்றும் விவசாயிகள் திண்டுக்கல்லில் இணைய வழியாக பார்வையிட்டனர்.

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகம் சார்பில் ஓராண்டில் ஒரு இலட்சம் இலவச விவசாய மின் இணைப்பு பெற்று பயனடைந்த பல்வேறு மாவட்ட விவசாயிகளுடன், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், கலந்துரையாடல் தமிழ்நாடு மின்சார வாரியம், சென்னை தலைமை அலுவலகத்தில் இன்று(16.04.2022) நடைபெற்றது. இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியை இணைய வழியாக பார்வையிடும் நிகழ்ச்சி திண்டுக்கல் பைபாஸ் ரோடு வேலு மஹாலில் நடைபெற்றது.மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி, அவர்கள், மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி, அவர்கள், மாண்புமிகு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு.சி.வி.கணேசன், அவர்கள். மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள், திண்டுக்கல் மாநகராட்சி மேயர் திருமதி இளமதி ஜோதிபிரகாஷ், திண்டுக்கல் பாராளுமன்ற உறுப்பினர் திரு.ப.வேலுச்சாமி, பழனி சட்டமன்ற உறுப்பினர் திரு.இ.பெ.செந்தில்குமார், வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ச.காந்திராஜன் ஆகியோர் விவசாயிகளுடன் பங்கேற்று, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் கலந்துரையாடல் நிகழ்ச்சியை இணைய வழியாக பார்வையிட்டனர்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் கனவு திட்டமான, ஓராண்டில் ஒரு இலட்சம் விவசாய மின் இணைப்பு வழங்கும் திட்டத்தின்படியும், மாண்புமிகு மின்சாரத்துறை அமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படியும், திண்டுக்கல் மின் பகிர்மான வட்டத்தில் விவசாய மின் இணைப்பு கேட்டு சாதாரண வரிசையில் 2003 முதல் 2013-ஆம் ஆண்டு வரையும், சுயநிதி திட்டத்தில் 2014 முதல் 2018-ஆம் ஆண்டு வரை பதிவு செய்துள்ள விவசாயிகளுக்கு விவசாயிகளின் வாழ்வாதாரம் மேம்படவும், விவசாய உற்பத்தியில் முன்னேற்றம் அடைந்து நாட்டின் வளர்ச்சியை பெருக்கிட திண்டுக்கல் மாவட்டத்தில் 9,013.67 ஹெக்டேர் விவசாய நிலம் பயனடையும் வகையில் ரூ.33.32 கோடி செலவில் உள்கட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டு, 5,902 இலவச விவசாய மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.அதன்படி, ஆத்தூர் சட்டமன்ற தொகுதியில் ரூ.7.73 கோடி மதிப்பீட்டில் 530 மின் இணைப்புகள் வழங்கப்பட்டதில் 1,874.93 ஏக்கர் விவசாய நிலம் பாசன வசதி பெறுகிறது. திண்டுக்கல் சட்டமன்ற தொகுதியில் ரூ.13 இலட்சம் மதிப்பீட்டில் 27 மின் இணைப்புகள் வழங்கப்பட்டதில் 37.73 ஏக்கர் விவசாய நிலம் பாசன வசதி பெறுகிறது. ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதியில் ரூ.3.91 கோடி மதிப்பீட்டில் 1,512 மின் இணைப்புகள் வழங்கப்பட்டதில் 8,258.1 ஏக்கர் விவசாய நிலம் பாசன வசதி பெறுகிறது. பழனி சட்டமன்ற தொகுதியில் ரூ.5.46 கோடி மதிப்பீட்டில் 724 மின் இணைப்புகள் வழங்கப்பட்டதில் 2,121.91 ஏக்கர் விவசாய நிலம் பாசன வசதி பெறுகிறது. வேடசந்தூர் சட்டமன்ற தொகுதியில் ரூ.7.74 கோடி மதிப்பீட்டில் 1,274 மின் இணைப்புகள் வழங்கப்பட்டதில் 4,542.73 ஏக்கர் விவசாய நிலம் பாசன வசதி பெறுகிறது. நத்தம் சட்டமன்ற தொகுதியில் ரூ.6.79 கோடி மதிப்பீட்டில் 1,261 மின் இணைப்புகள் வழங்கப்பட்டதில் 4,007.61 ஏக்கர் விவசாய நிலம் பாசன வசதி பெறுகிறது. நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் ரூ.1.50 கோடி மதிப்பீட்டில் 574 மின் இணைப்புகள் வழங்கப்பட்டதில் 1,384.42 ஏக்கர் விவசாய நிலம் பாசன வசதி பெறுகிறது.

இந்நிகழ்ச்சியில், மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்ததாவது:-

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஓராண்டில் ஒரு இலட்சம் இலவச விவசாய மின் இணைப்புகள் வழங்கப்படும் என அறிவித்ததற்கிணங்க, ஓராண்டு முடிவதற்குள்ளாகவே ஒரு இலட்சம் மின் இணைப்புகள் வழங்கப்பட்டுவிட்டது. தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகத்தின் செயல்பாட்டில் இது ஒரு மைல் கல். கடந்த ஆட்சியாளர்கள் காலத்தில் ஆண்டுக்கு 20,000 மின் இணைப்புகள் மட்டுமே வழங்கப்பட்டன. ஆனால் தற்போது ஒரு ஆண்டில் ஒரு இலட்சம் மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இதன்மூலம் 5 ஆண்டு பணிகள் ஓராண்டில் நிறைவேற்றி சாதனை படைக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் 9,013.67 ஹெக்டேர் விவசாய நிலம் பயனடையும் வகையில் ரூ.33.32 கோடி செலவில் உள்கட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டு, 5,902 இலவச விவசாய மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.மின் உற்பத்தியை மேம்படுத்துவதில் தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அனல் மின் நிலையங்களுக்குத் தேவையான நிலக்கரி பெறுவதில் தமிழக அரசு எளிமையாக செயல்பட்டு வருகிறது. தமிழக அரசின் பல்வேறு நடவடிக்கைகளின் காரணமாக தமிழகத்தில் மின் உற்பத்தி அதிகரித்துள்ளது என மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், விவசாயிகள், மின்துறை அலுவலர்கள், அரசுத்துறை அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.