மூடு

உலக மகளிர் தினவிழா 2021-2022-ஐ முன்னிட்டு, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் வழங்கப்படவுள்ள அவ்வையார் விருதிற்காக தகுதியுடைய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது

வெளியிடப்பட்ட தேதி : 29/12/2021

செ.வெ.எண்:-74/2021

நாள்: 28.12.2021

உலக மகளிர் தினவிழா 2021-2022-ஐ முன்னிட்டு, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் வழங்கப்படவுள்ள அவ்வையார் விருதிற்காக தகுதியுடைய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தகவல்

பெண்களின் முன்னேற்றத்திற்கு சிறந்த சேவை புரிந்த ஒருவருக்கு 2021-2022ம் ஆண்டிற்கான அவ்வையார் விருது 08.03.2021 உலக மகளிர் தின விழாவில் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களால் வழங்கப்பட உள்ளது. இவ்விருதுக்கு ரொக்க பரிசு, தங்கப்பதக்கம், சான்று மற்றும் சால்வை வழங்கப்படும். மேற்படி விருதுக்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

2022-ம் ஆண்டு அவ்வையார் விருது வழங்கும் பொருட்டு கருத்துருக்கள் அனுப்புவதற்கான விதிமுறைகள்:

• தமிழ்நாட்டை பிறப்பிடமாக கொண்டவராகவும், 18 வயதிற்கு மேற்பட்டவராகவும் இருத்தல் வேண்டும்.
• சமூகநலனைச் சார்ந்த நடவடிக்கைகள், பெண் குலத்திற்கு பெருமை சேர்க்கும் வகையிலான நடவடிக்கை, மொழி, இனம், பண்பாடு, கலை, அறிவியல், நிர்வாகம் போன்ற துறைகளில் மேன்மையாக பணிபுரிந்து மக்களுக்கு தொண்டாற்றும் வகையில் தொடர்ந்து பணியாற்றுவராக இருத்தல் வேண்டும்.
• விண்ணப்பதாரரின் கருத்துரு (தமிழ் மற்றும் ஆங்கிலத்தில்) நிழற்படம்-2 ஆகியவைகளுடன் புத்தக வடிவில் இரண்டு (அசல்-1 மற்றும் நகல்-1) கருத்துருக்கள் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் வளாகத்திலுள்ள
மாவட்ட சமூகநல அலுவலகத்தில் 05.01.2022-ம் தேதிக்குள் சமர்ப்பித்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.