மூடு

ஊரக சுகாதார கணக்கெடுப்பு மற்றும் நீர் மேலாண்மை குறித்த ஆலோசனைக் கூட்டம் – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.மு.விஜயலட்சுமி.இ.ஆ.ப அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

வெளியிடப்பட்ட தேதி : 03/09/2019
1

செ.வெ.எண்:05/2019 நாள்:03.09.2019

திண்டுக்கல் மாவட்டம்

ஊரக சுகாதார கணக்கெடுப்பு மற்றும் நீர் மேலாண்மை குறித்த ஆலோசனைக் கூட்டம் – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.மு.விஜயலட்சுமி.இ.ஆ.ப அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்ட மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில்; ஊரக சுகாதார கணக்கெடுப்பு மற்றும் நீர் மேலாண்மை குறித்த ஆலோசனைக் கூட்டம் இன்று(03.09.2019) மாவட்ட ஆட்சி;த்தலைவர் திருமதி.மு.விஜயலட்சுமி.இ.ஆ.ப அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு பின் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:-

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 14 ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 306 ஊராட்சிகளில் குடிநீரினை தட்டுபாடின்றி வழங்கிட வேண்டும். குடிநீர் குழாய் வழி தடங்களை முறையாக கண்காணித்து பழுது ஏற்பட்டால் உடனடியாக சீரமைத்து, சீரான முறையில் குடிநீர் வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

மழை நீர் சேகரிப்பு திட்டத்தின் பயன் குறித்து அனைத்து பொதுமக்களிடம் எடுத்து கூறி மழைநீர் கட்டமைப்பினை ஏற்படுத்த வேண்டும். மாவட்டத்தில் உள்ள 3084 கிராப்புறங்களில் உள்ள (அரசு கட்டிடங்கள் உட்பட) 4,40,811 கட்டிடங்களிலும் மழைநீர் சேகரிப்பினை முறையாக ஆய்வு செய்து அரசு மற்றும் பொது கட்டிடங்களில் இரண்டு மாததிற்குள்ளாகவும், தனியார் கட்டிடங்களில் மூன்று மாத்திற்குள்ளாகவும் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பினை ஏற்படுத்திட வேண்டும். தற்போது மழைநீர் சேமிப்பு தொட்டி இல்லாத கட்டிட உரிமையாளருக்கு சுற்றறிக்கை வழங்கி அதன் அவசியம் குறித்து எடுத்துரைத்து குறிப்பிட்ட கால அளவிற்குள் மழைநீர் சேகரிப்பு தொட்டியினை உருவாக்கிட அறிவுறுத்த வேண்டும். மழைநீர் சேகரிப்பு தொட்டி ஏற்படுத்தாத கட்டிட உரிமையாளருக்கு குறிப்பணை (நோட்டீஸ்) வழங்கி மேல் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின்கீழ் தூய்மை காவலர்கள் மூலம் குடியிருப்பு பகுதிகளிலிருந்து குப்பைகளை மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பை என்று பிரித்து பெற வேண்டும். மக்கும் குப்பைகளை பயன்படுத்தி இயற்கை உரமாகவும், மக்காத குப்பைகளை மறுசுழற்சிக்கும் பயன்படுத்திட வேண்டும். பொது கழிப்பறை, சாலையோர கழிப்பறை மற்றும் தனியார் கழிப்பறைகளை ஆய்வு மேற்கொண்டு, கட்டிட உரிமையாளர்களிடம் பயன்படுத்திட அறிவுறுத்தி, எழுத்து பூர்வமாக உறுதி செய்திட வேண்டும். பொது மற்றும் சாலையோர கழிப்பறைகளுக்கு தண்ணீர் வசதி செய்து கொடுத்து தொடர்ச்சியாக தண்ணீர் வழங்கி தூய்மையாக பராமரித்திட வேண்டும். இதனை ஊராட்சி செயலாளர் மற்றும் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முறையாக ஆய்வு செய்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சி;த்தலைவர் திருமதி.மு.விஜயலட்சுமி.இ.ஆ.ப அவர்கள் தெரிவித்தார்.

முன்னதாக, தூய்மை கணக்கெடுப்பு ஊரகம்-2019 குறித்த கையேட்டினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வெளியிட்டனர். மாவட்ட ஊரகவளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் அவர்கள் பெற்றுக்கொண்டார்.

ஆலோசனைக்கூட்டத்தில், மாவட்ட ஊரகவளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திருமதி.கவிதா, உதவி இயக்குநர்(ஊராட்சிகள்) (பொ) திரு.அன்புமணி, உதவி தி;ட்ட அலுவலர்கள், உதவி செயற்பொறியாளர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஊராட்சி செயலாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.