மூடு

ஐடிஐ படித்தவர்களுக்கு தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம் குள்ளனம்பட்டி அரசு தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் 21.04.2022 அன்று நடைபெறவுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

வெளியிடப்பட்ட தேதி : 05/04/2022

செ.வெ.எண்:-04/2022

நாள்:04.04.2022

திண்டுக்கல் மாவட்டம்

ஐடிஐ படித்தவர்களுக்கு தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம் குள்ளனம்பட்டி அரசு தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் 21.04.2022 அன்று நடைபெறவுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

இந்திய அரசு, திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவு அமைச்சரகம் மற்றும் இயக்குநரகம், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை சார்பாக, திண்டுக்கல் மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம் மற்றும் அரசு தொழிற்பயிற்சி நிலையம் இணைந்து நடத்தும் தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம் திண்டுக்கல், நத்தம் ரோடு, குள்ளனம்பட்டியில் அமைந்துள்ள அரசு தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் 21.04.2022 அன்று காலை 9.00 மணி முதல் நடைபெறவுள்ளது. இம்முகாமில் திண்டுக்கல்லில் உள்ள அரசு மற்றும் தனியார் தொழில் நிறுவனங்கள் கலந்துகொண்டு தங்களுக்குத் தேவையான தொழிற்பிரிவுகளில் தொழிற்பழகுநர் பயிற்சி வழங்க, பயிற்சியாளர்களை தேர்வு செய்யவுள்ளனர். இதில் ஐ.டி.ஐ., தேர்ச்சி பெற்றவர்கள் கலந்துகொண்டு பயன்பெறலாம்.தற்போது தொழிற்பழகுநராக சேர்க்கை செய்யப்படும் பயிற்சியாளர்களுக்கு மாதாந்திர உதவித்தொகையாக குறைந்தபட்சம் ரூ.8,000/-வழங்கப்படும். எனவே, இதுவரை தொழிற்பழகுநர் பயிற்சி முடிக்காத அரசு, தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் தேர்ச்சி பெற்ற பயிற்சியாளர்கள் அனைவரும் மேற்படி முகாமில் கலந்துகொண்டு இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ளலாம். மேலும், விபரங்களுக்கு மாவட்ட திறன் பயிற்சி அலுவலக உதவி இயக்குநரை 0451-2970049 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொண்டு தெரிந்துகொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.