மூடு

ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் ரூ.24.18 கோடி மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி,அவர்கள் தொடங்கி வைத்தார்.

வெளியிடப்பட்ட தேதி : 15/07/2021
.

செ.வெ.எண்:-19/2021

நாள்:-13.07.2021

திண்டுக்கல் மாவட்டம்

ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் ரூ.24.18 கோடி மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி,அவர்கள் தொடங்கி வைத்தார்.

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் ரூ.24.18 கோடி மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சித்திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி, அவர்கள், இன்று(13.07.2021) துவக்கி வைத்து தெரிவித்ததாவது:-

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பொறுப்பேற்றவுடன், தேர்தல் நேரத்தில் சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறார். கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு காலத்தில் நிவாரணமாக குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.4000, 14 வகையான மளிகைப்பொருட்கள், நகரப் பேருந்துகளில் மகளிருக்கு இலவச பயணம், ஆவின் பால் லிட்டருக்கு ரூ.3 குறைப்பு, கொரோனா பாதிப்பு நோயாளிகளுக்கு தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு வசதி என பல்வேறு திட்டங்களை பொதுமக்களுக்காக செயல்படுத்தி வருகிறார்.‘உங்கள் தொகுதியில் மாண்புமிகு முதலமைச்சர்’ என்ற திட்டத்தில் யார் மனு அளித்தாலும் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதற்காக தனி அதிகாரியை நியமித்து மனுக்கள் மீது நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளிலும் கடந்த 10 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அனைத்து திட்டங்களும் விரைந்து நிறைவேற்றப்படும். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பொதுமக்கள், அரசு ஊழியர்கள், ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் என அனைத்து தரப்பு மக்களுக்கும் இந்த ஆட்சியில் நல்லது நடக்கும் என்பதை உறுதியளிக்கிறோம்.

முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் ஆட்சியில் சொன்னதைத்தான் செய்வோம்… செய்வதைத்தான் சொல்வோம் என்ற வகையில் வெளிப்படையான, நேர்மையான, தூய்மையான ஆட்சி நடைபெற்றது. அந்தவகையில் தற்போது மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மக்களுக்கான தேவைகளை நிறைவேற்றி வருகிறார்.

ஒட்டன்சத்திரத்தில் இருந்து ஜவ்வாதுபட்டி, குள்ளவீரன்பட்டி, சீரங்ககவுண்டன்புதூர், பாலப்பன்பட்டிபுதூர், மஞ்சநாயக்கன்பட்டி, பொருளுர் ஆகிய ஊர்களுக்கு பல்வேறு வழித்தடங்கள் வழியாகவும், பழனியில் இருந்து மடத்துக்குளம், முத்துநாயக்கன்பட்டி, காளியப்பகவுண்டன்பட்டி, கள்ளிமந்தையம், அம்பிளிக்கை, சாலக்கடை ஆகிய ஊர்களுக்கு பல்வேறு வழித்தடங்கள் வழியாகவும் மற்றும் திண்டுக்கல் – பொள்ளாட்சி என 20 வழித்தடங்களில் அரசு பேருந்துகள் சேவை இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் கோரிக்கைகளுக்கேற்ப இன்னும் பல வழித்தடங்களில் பேருந்துகள் சேவை தொடங்கப்படும். தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் லாப நோக்கத்துடன் அல்லாமல் பொதுநோக்கத்துடன் பேருந்துகளை இயக்கி வருகிறது.

ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனைக்கு தனியார் பங்களிப்புடன் 2 ஆம்புலன்ஸ் சேவைகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

ஒட்டன்சத்திரம் நகராட்சி பகுதியில் திடீர்நகரில் 60,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் ஒரு இலட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தரைமட்ட நீர்த்தேக்கத் தொட்டி, ஏ.பி.பி.நகரில் மழைநீர் வாய்க்கால் கட்டும் பணி, குடிநீர் தொட்டி அமைத்தல், சிறுபாலம், கழிவுநீர் வாடிகால் அமைத்தல் உட்பட மொத்தம் 12 வளர்ச்சித் திட்டப் பணிகள் ரூ.1.07 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ள இன்று பூமிபூஜை செய்து பணிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் கட்டிடம் ரூ.3.08 கோடி மதிப்பீட்டில் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரு.25 லட்சம் மதிப்பீட்டில் கேதையுறம்பு ஊராட்சி திப்பம்பட்டியில் கட்டப்பட்ட சமுதாயக்கூடம் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.

புளியமரத்துக்கோட்டை ஊராட்சி கோடாங்கிபட்டியில் ஆதிதிராவிடர் காலனி மற்றும் இடையகோட்டை ஊராட்சி இ.புதூர் காளியம்மன் கோவில் அருகில் ஆகிய இடங்களில் ஊராட்சி ஒன்றிய பொதுநிதியில் இருந்து தலா ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் சமுதாயக்கூடங்கள் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.

ஊராட்சி ஒன்றிய சாலைகளை இதர மாவட்ட சாலையாக தரம் உயர்த்துதல் திட்டத்தில் ஜோகிபட்டி ஊராட்சியில் ஜோகிபட்டி- சோழியப்பக்கவுண்டனூர் சாலை ரூ.2.60 கோடி மதிப்பீட்டிலும், இடையகோட்டை ஊராட்சியில் பாறைப்பட்டி இணைப்பு இடையகோட்டை – எல்லபட்டி சாலை ரூ.1.05 கோடி மதிப்பீட்டிலும், சின்னக்காம்பட்டி ஊராட்சியில் அச்சாயிகோவில் – இராகவநாயக்கன்பட்டி சாலை ரூ.2.00 கோடி மதிப்பீட்டிலும், மார்க்கம்பட்டி ஊராட்சியில் ஈரோடு மாவட்ட எல்லை சாலை (எம்.அத்தப்பன்பட்டி) துறையூர் சாலை ரூ.1.16 கோடி மதிப்பீட்டிலும், குத்திலிப்பை ஊராட்சியில் குத்திலிப்பை பேருந்து நிறுத்தம் முதல் குட்டியாகவுண்டன்புதூர் ஆதிதிராவிடர் காலனி சாலை ரூ.2.20 கோடி மதிப்பீட்டிலும், ஐ.வாடிப்பட்டி ஊராட்சியில் ஐ.வாடிப்பட்டி – இடையன்வலசு சாலை ரூ.2.00 கோடி மதிப்பீட்டிலும், கே.கீரனூர் ஊராட்சியில் கே.கீரனூர் – மிராஸ்நகர் சாலை ரூ.2.07 கோடி மதிப்பீட்டிலும், கே.கீரனூர் – இடையன்வலசு சாலை வழி பெருமாள்கவுண்டன் வலசு ஆதிதிராவிடர் காலனி சாலை ரூ.2.00 கோடி மதிப்பீட்டிலும், ஓடைப்பட்டி ஊராட்சியில் கல்லன்தோட்டம் பிரிவு வெங்கடாபுரம் சாலை (எல்லமேடு பேருந்து நிறுத்தம்) சாலை ரூ.2.00 கோடி மதிப்பீட்டிலும், ஓடைப்பட்டி அம்பிளிக்கை – குத்திலிப்பை சாலையிலிருந்து குளத்துப்பாளையம் சாலை ரூ.2.10 கோடி மதிப்பீட்டிலும் சாலைகளை மேம்படுத்தும் பணிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன. ஆகமொத்தம் ரூ.24.18 கோடி மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சித்திட்டப் பணிகள் இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளன.

ஒட்டன்சத்திரம் நகராட்சி பகுதி மக்களின் குடிநீர் வசதிக்காக பரம்பிகுளம் – ஆழியாறு அணை கூட்டுக்குடிநீர் திட்டம் ரூ.630 கோடி மதிப்பீட்டில் விரைவில் செயல்படுத்தப்படும். அதேபோல் பொதுமக்களின் அடிப்படைத் தேவைகளான சாலைவசதி, குடிநீர் வசதி, மழைநீர் வடிகால் வசதி, கழிவுநீர் வசதி என அனைத்து தேவைகளும் உடனுக்குடன் நிறைவேற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி, அவர்கள் தெரிவித்தார்.

முன்னதாக ஒட்டன்சத்திரம் பகுதியில் 9 நபர்களுக்கு கிராம உதவியாளர் பணிக்கான ஆணையை மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அவர்கள் வழங்கினார். தொடர்ந்து ஒட்டன்சத்திரம் நகராட்சி திடீர்நகரில் உள்ள நியாயவிலைக் கடையில் மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அவர்கள் ஆய்வு மேற்கொண்டார். பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படும் பொருட்களின் தரத்தை ஆய்வு செய்தார். மேலும் இந்த நியாயவிலைக் கடைக்கு நிரந்தர கட்டிடம் கட்டுவதற்கு இடம் தேர்வு செய்ய ஒட்டன்சத்திரம் வட்டாட்சியர் மற்றும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

இந்நிகழ்ச்சிகளில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர்ஃகூடுதல் ஆட்சியர் திரு.ச.தினேஷ்குமார், இ.ஆ.ப., பழனி வருவாய் கோட்டாட்சியர் திருமதி.ஆனந்தி, ஒட்டன்சத்திரம் நகராட்சி ஆணையாளர் திருமதி தேவிகா, ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் திருமதி அய்யம்மாள், துணைத்தலைவர் திருமதி காயத்திரி தர்மராஜ், மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் திரு.பொன்ராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் தொடர்புடைய அலுவலர்கள் உடன் இருந்தனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம், திண்டுக்கல்.