ஒட்டன்சத்திரம் வட்டம், கள்ளிமந்தையம் ஊராட்சி ஒன்றிய பகுதியில் நடைபெற்ற சிறப்பு மக்கள் தொடர்பு முகாமில் மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் 2607 பயனாளிகளுக்கு ரூ.564.78 இலட்சம் மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

செ.வெ.எண்:-79/2022
நாள்: 29.06.2022
திண்டுக்கல் மாவட்டம்
ஒட்டன்சத்திரம் வட்டம், கள்ளிமந்தையம் ஊராட்சி ஒன்றிய பகுதியில் நடைபெற்ற சிறப்பு மக்கள் தொடர்பு முகாமில் மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் 2607 பயனாளிகளுக்கு ரூ.564.78 இலட்சம் மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் வட்டம், கள்ளிமந்தையம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் சிறப்பு மக்கள் தொடர்பு முகாம் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று(19.07.2022) நடைபெற்றது.
இவ்விழாவில் மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் கலந்துகொண்டு, 2607 பயனாளிகளுக்கு ரூ.564.78 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். கூடுதல் ஆட்சியர்(வளர்ச்சி) திரு.ச.தினேஷ்குமார்,இ.ஆ.ப., அவர்கள், மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி வே.லதா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில் மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அவர்கள் பேசியதாவது:-
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தேர்தல் நேரத்தில் சொன்ன வாக்குறுதிகளை படிப்படியாக நிறைவேற்றி வருகிறார். இதுவரை 208 வாக்குறிதிகளை நிறைவேற்றி உள்ளார்கள். தமிழக மக்களுக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து அதை தொடர்ந்து செயல்படுத்தி, இந்தியாவிலேயே தலைசிறந்த முதல்வராக திகழ்கிறார். மகளிருக்கு அரசு நகரப்பேருந்துகளில் இலவச பயணம் மேற்கொள்ள உத்தரவிட்டதையடுத்து, ஏராளமான பெண்கள் பயனடைந்து வருகின்றனர். குடும்ப அட்டை கேட்டு விண்ணப்பித்தவர்களில் தகுதியுள்ளவர்களுக்கு 15 நாட்களில் குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி ஆட்சிப்பொறுப்பேற்ற 14 மாதங்களில் தமிழகத்தில் இதுவரை 12.17 லட்சம் குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் விவசாயக்கடன், சிறுவணிக கடன், மாற்றுத்திறனாளி கடன் என பல்வேறு வகையான கடனுதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. வீடு இல்லா ஏழை எளிய மக்களுக்கு வீட்டு மனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டு பல்வேறு திட்டங்களின் கீழ் வீடு வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 10 ஆண்டுகளில் தமிழகத்தை குடிசை இல்லா மாநிலமாக மாற்றும் வகையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் செயல்பட்டு வருகிறார். தமிழகத்தில் அரசு பள்ளிகளில் 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை படித்து, கல்லூரிகளில் உயர் கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டத்தை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் செயல்படுத்தியுள்ளார்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பெறுப்பேற்ற பின்பு இப்படிப்பட்ட நிகழ்ச்சி, கொரோனா காலமாக இருந்த காரணத்தால் இடையில் நடைபெறவில்லை. ஒட்டன்சத்திரம் தொகுதியில் ஆதிதிராவிடர் நலத்துறையின் சார்பில் 120 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது. அரசு மக்களுக்கு எவ்வளவு உதவிகள் செய்ய முடியுமோ அந்த வகையில் செய்து கொண்டியிருக்கிறது. மாவட்டம் முழுவதும் உள்ள 7 சட்டமன்ற தொகுதி மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றி வருகிறது.
கள்ளிமந்தையத்தில் இன்று 2607 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது. மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் குடிநீர், சாலை வசதி, தெருவிளக்கு, கழிப்பறை, கல்வி, பேருந்து, இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை போன்ற பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கப்பட்டு வருகிறது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் எல்லோருக்கும் எல்லாம் என்ற வகையில் ஆட்சி சிறப்பாக செய்து வருகிறது. கடந்த 14 மாத காலத்தில் சிறப்பான ஆட்சி நடத்தி வருகிறது. அந்த வகையில் ஒட்டன்சத்திரம் தொகுதியில் பிற்படுத்தப்பட்ட 175 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டுள்ளது. ஆதிதிராவிடர் மக்களுக்கு 120 பயனாளிகளுக்கு பட்டா வழங்க இருக்கிறோம். தொகுதி முழுவதும் இருக்கின்ற ஊராட்சிகள், பேரூராட்சிகள், ஒட்டன்சத்திரம் நகராட்சி உள்ள ஏழை, எளிய பொதுமக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கி வீடுகட்டுவதற்கான ஆணையும் வழங்கப்பட்டு வருகிறது. கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தின்கீழ் பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு வருகிறது. தேர்வு செய்து முடிந்த உடனே அனைவருக்கும் வீடு கட்டும் பணிகள் துவங்கப்படும். முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள் கடந்த 5 முறை தமிழகத்தில் முதலமைச்சராக இருந்து, பொற்கால ஆட்சியை நடத்தினார்கள். மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் பொறுப்பேற்பதற்கு முன்பு ஆட்சிக்கு வாக்களித்தவர்கள் மகிழ்ச்சி அடைவதைவிட வாக்களிக்காதவர்கள் வருத்தப்படக்கூடிய வகையில் ஏன் இந்த ஆட்சிக்கு வாக்களிக்க வில்லை என்று வருத்தப்பட கூடிய வகையில் இருக்கும் என்று சொன்னார். இன்று 2600 பயனாளிகளுக்கு நலத்திட்டம் வழங்கபடபடுகிறது. எல்லோரும் எல்லாம் என்ற அடிப்படையில் ஆட்சி செய்து வருகிறோம். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பெறுப்பேற்ற பின்பு ஒட்டன்சத்திரம் தொகுதி பரப்பலாறு அணை தூர்வார வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்தார்கள். அதற்கு அரசாணை வெளியிடப்பட்டு, சுற்றுச்சுழல் அனுமதி பெற்று பரப்பலாறு அணை தூர்வாரப்படும். விவசாயிகள் பொருட்கள் வைப்பதற்கு ரூ.5 கோடி மதிப்பீட்டில் குளிர்பாதன அறை கட்டப்பட்டு வருகிறது மேலும், 15 கோடி மதிப்பீட்டில் அரசு கல்லூரி அமைக்கப்படவுள்ளது. இந்துசமய அறநிலையத்துறையின் சார்பில் ஒட்டன்சத்திரத்தில் 10 ஏக்கர் நிலப்பரப்பில் இடம் தேர்வு செய்யப்பட்டு, ரூ.20 கோடி மதிப்பீட்டில் கல்லூரி கட்டப்படவுள்ளது. பழனியில் சித்தா கல்லூரி அமைப்பதற்கு அனுமதி கிடைத்தவுடன், சித்தா கல்லூரி பழனியில் நிறுவப்படவுள்ளது. திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கூட்டுறவுதுறையின் மூலம் மன்னவனூரில் கூட்டுறவு மேலாண்மை பயிற்சி மையம் அமைக்கப்படவுள்ளது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தமிழ்நாட்டில் 11 இடங்களில் தொழிற்பயிற்சி துவங்கப்படும் என அறிவித்தார்கள். அதில் திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் பகுதியில் இந்தாண்டு 1 தொழிற்பயிற்சி அமைக்கப்படவுள்ளது. பழனியிலிருந்து தாரபுரம் வரை செல்லும் சாலை நான்கு வழி சாலையாக மாற்றப்படும். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைக்கு ஒட்டன்சத்திரம் தொகுதி பகுதியில் ரூ.250 கோடி மேல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. ஆரம்ப சுகாதார நிலையம் கட்டுவதற்கு ரூ.6 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இன்றைய விழாவில், ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் நத்தம் இலவச வீட்டுமனைப்பட்டா 570 பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது. இதன் மதிப்பு ரூ.155.31 இலட்சமாகும். பிற்படுத்தப்பட்டோர் நத்தம் வகைப்பாட்டில் இலவச வீட்டுமனைப்பட்டா 722 பயனாளிகளுக்கு ரூ.162.93 இலட்சம் மதிப்பிலும், தீர்வை ஏற்பட்ட தரிசு நிலத்திலிருந்து நத்தமாக வகைபாடு மாற்றம் செய்து இலவச வீட்டுமனைப் பட்டா 17 பயனாளிகளுக்கு ரூ.1.02 இலட்சம் மதிப்பிலும், பட்டா நிலத்திலிருந்து நில உரிமை விடல் மூலமாக நத்தமாக வகைபாடு மாற்றம் செய்த இலவச வீட்டுமனைப்பட்டா 24 பயனாளிகளுக்கு ரூ.0.65 இலட்சம் மதிப்பிலும், 1017 முதியோர்கள் மாதாந்திர உதவித்தொகை பெறுவதற்கான ஆணைகள், உணவு பொருள் வழங்கல் துறையின் மூலம் 97 பயனாளிகளுக்கு புதிய குடும்ப அட்டை, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் சார்பில் இலவச தேய்ப்பு பெட்டி 75 பயனாளிகளுக்கு ரூ.3.81 இலட்சம் மதிப்பிலும் என மொத்தம் 2607 பயனாளிகளுக்கு மொத்தம் ரூ.564 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது. என மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் பேசினார்.
இவ்விழாவில், பழனி வருவாய் கோட்டாட்சியர் திரு.சிவக்குமார், ஒட்டன்சத்திரம் வட்டாட்சியர் திரு.முத்துச்சாமி. மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் திரு.கா.பொன்ராஜ், தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றிய தலைவர் திருமதி சத்தியபுவனா ராஜேந்திரன், ஒட்டன்சத்திரம் ஒன்றியக்குழுத்தலைவர் திருமதி அய்யம்மாள், ஒட்டன்சத்திரம் துணைத்தலைவர் திரு.தங்கம். ஒன்றியக்குழு உறுப்பினர் திரு.கிருஷ்ணசாமி, ஒட்டன்சத்திரம் நகர்மன்ற தலைவர் திரு.திருமலைச்சாமி, கள்ளிமந்தையம் ஊராட்சி மன்ற தலைவர் திரு.கணேசன், முக்கிய பிரமுகர்கள் திரு.ராஜாமணி, தங்கராஜ், சிவசுப்பிரமணி, ஜோதீஸ்வரன், ஹரிஹரசுதன் மற்றும் பல்வேறு துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.