மூடு

ஒட்டன்சத்திரம் வட்டம், கே.கீரனூர் பகுதியில் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் இன்று(11.04.2022) ஆய்வு மேற்கொண்டார்.

வெளியிடப்பட்ட தேதி : 12/04/2022
.

செ.வெ.எண்:-27/2022

நாள்:11.04.2022

திண்டுக்கல் மாவட்டம்

ஒட்டன்சத்திரம் வட்டம், கே.கீரனூர் பகுதியில் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் இன்று(11.04.2022) ஆய்வு மேற்கொண்டார்.

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் வட்டம், கே.கீரனூர் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் பூமியில் இருந்து திடீர் சத்தம் ஏற்பட்டு சிறிய அளவிலான அதிர்வுகள் ஏற்பட்டுள்ளது. அதன்காரணமாக அந்தப் பகுதியில் உள்ள வீடுகளின் சுவர்களில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்க்ள தெரிவித்துள்ளனர். மேலும், அந்தப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளதாக வந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.இதையறிந்த, மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் இன்று(11.04.2022) சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுடன் கே.கீரனூர் சென்று ஆய்வு மேற்கொண்டார். இந்த சத்தம் ஏற்பட்டது குறித்து சம்பந்தப்பட்ட கனிமவளத்துறை மற்றும் புவியியல் துறையினருடன் ஆலோசனை மேற்கொண்டதில், பயப்படுகின்ற அளவிற்கு ஏதுமில்லை என்றும் அதனால் பொதுமக்கள் பயம் கொள்ள தேவையில்லை, இருந்தபோதிலும், பொதுமக்கள் பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார். இந்தப்பகுதியில் வசிக்கும் வீடு இல்லாத ஏழை, எளியவர்களுக்கு கலைஞர் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் பயனாளிகளை தேர்வு செய்து இலவச வீடுகள் கட்டித்தர சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வின்போது, கூடுதல் ஆட்சியர்(வளர்ச்சி) திரு.ச.தினேஷ்குமார்,இ.ஆ.ப., அவர்கள், பழனி வருவாய் கோட்டாட்சியர் திரு.சிவக்குமார், கனிம வளத்துறை உதவி இயக்குநர் திரு.பூரணலிங்கம், புவியியலாளர் திருமதி அஸ்வினி, ஒட்டன்சத்திரம் வட்டாட்சியர் திரு.மு.முத்துச்சாமி, வட்டார வளர்ச்சி அலுவலர் திரு.காமராஜ், முக்கிய பிரமுகர் திரு.ஜோதீஸ்வரன், கே.கீரனூர் ஊராட்சித் தலைவர் திருமதி விஜயலட்சுமி உட்பட துறை அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.