மூடு

ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி, மாற்றுத்திறனுடைய குழந்தைகளுக்கான உள்ளடக்கிய கல்வி விழிப்புணர்வுத் திட்டம் மூலம் தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை (UDID) பதிவு செய்ய சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

வெளியிடப்பட்ட தேதி : 16/03/2022

செ.வெ.எண்:-29/2022

நாள்:16.03.2022

திண்டுக்கல் மாவட்டம்

ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி, மாற்றுத்திறனுடைய குழந்தைகளுக்கான உள்ளடக்கிய கல்வி விழிப்புணர்வுத் திட்டம் மூலம் தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை (UDID) பதிவு செய்ய சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி, மாற்றுத்திறனுடைய குழந்தைகளுக்கான உள்ளடக்கிய கல்வித் திட்டத்தில் விழிப்புணர்வு, மருத்துவ மதிப்பீட்டு முகாமில் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை வழங்க முகாம் நடைபெற உள்ளது.

திண்டுக்கல் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி சார்பில் 14 வயது கீழ்பட்ட மாற்றுத்திறனாளிகள் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவியர் இதுநாள் வரை தேசிய அடையாள அட்டை பெற்ற மாணவ, மாணவியர் தனித்துவம் வாய்ந்த தேசிய அடையாள அட்டை பதியாத மாற்றுத்திறனாளிகள் பயன்பெறும் வகையில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படவுள்ளது.

அதன்படி, சிறப்பு முகாம் வரும் 17-03-2022 அன்று வத்தலக்குண்டு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், 18-03-2022 அன்று நிலக்கோட்டை வட்டார வள மையத்திலும், 22-03-2022 அன்று நத்தம் துரைகமலம் அரசு மேல்நிலைப்பள்ளியிலும், 23-03-2022 அன்று சாணார்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியிலும், 24-03-2022 அன்று வடமதுரை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், 25-03-2022 அன்று வேடசந்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியிலும். 29-03-2022 அன்று குஜிலியம்பாறை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியிலும். 30-03-2022 அன்று பழனி நகரவை மேல்நிலைப்பள்ளியிலும், 31-03-2022 அன்று ஒட்டன்சத்திரம் கே.ஆர்.அரசு மேல்நிலைப்பள்ளியிலும், 01-04-2022 கொடைக்கானல் அரசு மேல்நிலைப்பள்ளியிலும், 05-04-2022 அன்று தொப்பம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியிலும், 06-04-2022 அன்று கன்னிவாடி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், 07-04-2022 அன்று பழனி புறநகர் நகரவை மேல்நிலைப்பள்ளியிலும், 08-04-2022 அன்று திண்டுக்கல் (பழனி சாலை) காந்திஜி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது.

இம்முகாமில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் மூலம் தேசிய அடையாள அட்டை பெற்று, UDID தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை பதியாத மாற்றுத்திறனாளிகள் பதிவு செய்திடலாம். மேலும், தொழில் வங்கிக்கடன், பேட்டரியால் இயங்கும் சக்கர நாற்காலி, மோட்டார் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர், தையல் இயந்திரம், காது கேட்கும் காதொலி கருவி, மூன்று சக்கர சைக்கிள், சக்கர நாற்காலி, ஊன்றுகோல், Caliper போன்ற உபகரணங்கள் தேவைப்படும் மாற்றுத்திறனாளிகள் வந்து விண்ணப்பித்திடலாம், விண்ணப்பத்துடன் தேசிய அடையாள அட்டை அசல் மற்றும் நகல், பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் – 1, ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல் ஆகியவற்றுடன் பாதுகாவலர் மட்டும் நேரில் வந்து விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. ஏற்கனவே, தேசிய அடையாள அட்டை பெற்று தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை (UDID) பதிந்தவர்கள் மற்றும் ஏற்கனவே உபகரணங்கள் பெற்றவர்கள் இம்முகாமில் கலந்துகொள்ள தேவையில்லை.

மேலும் விவரங்களுக்கு 0451-2460099 என்ற மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலஅலுவலக தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தெரிந்துகொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.