மூடு

ஓய்வூதியம் பயனாளிகளின் வீட்டிற்கே சென்று ஓய்வூதியம் வழங்கிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மு.விஜயலட்சுமி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்

வெளியிடப்பட்ட தேதி : 01/04/2020

செ.வெ.எண்:-03:2020 நாள்:01.04.2020

திண்டுக்கல் மாவட்டம்

ஓய்வூதியம் பயனாளிகளின் வீட்டிற்கே சென்று ஓய்வூதியம் வழங்கிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மு.விஜயலட்சுமி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்

————————————————————————————————————————————-

மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை மற்றும் தகவல் தொழில் நுட்பவியல் துறை அமைச்சர் அவர்கள் அறிவித்துள்ளவாறு, திண்டுக்கல் மாவட்டத்தில் சமூக பாதுகாப்புத் திட்டங்களின் கீழ் 64,630 பயனாளிகளில்; அஞ்சலகம் மூலமாக 7,376 பயனாளிகளுக்கும், வங்கிகள் மூலமமாக 57,254 பயனாளிகளுக்கும் இம்மாதத்திற்கான ஓய்வூதியம் பயனாளிகளின் வீட்டிற்கே சென்று வழங்கிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

எனவே திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 10 வட்டங்களில் பின்வரும் எண்ணிக்கையில் மார்ச் 2020-ம் மாதத்திற்கான உதவித்தொகை அஞ்சலக பணியாளர்கள் மற்றும் வங்கி வணிக தொடர்பாளர்கள் மூலமாக உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் பயனாளிகளின் வீட்டிற்கே நேரடியாக சென்று வழங்கப்படவும் இப்பணியினை மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் மற்றும், மாவட்ட முதுநிலை அஞ்சல் கண்காணிப்hளர், சார் ஆட்சியர் பழனி, வருவாய் கோட்டாட்சியர் திண்டுக்கல் / கொடைக்கானல் மற்றும் துணை ஆட்சியர் நிலையிலான மண்டல அலுவலர்கள் மூலமாக கண்காணிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்),வருவாய் வட்டாட்சியர்கள், தனி வட்டாட்சியர்கள்(சமூக பாதுகாப்புத் திட்டம்) அலுவலர்கள் ஒவ்வொரு வட்டம் வாரியாக கண்காணித்து அறிக்கை அனுப்பிடவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மண்டல துணை வட்டாட்சியர், வருவாய் ஆய்வர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் கிராம உதவியாளர்கள் மற்றும் வங்கிப் பணியாளர்கள், அஞ்சலக களப் பணியாளர்கள் இம்மாதம் 25-ம் தேதிக்குள் அனைத்து கிராமங்களிலும் பயனாளிகளுக்கு, வீட்டிற்கே நேரடியாக சென்று, உரிய பாதுகாப்புடன் சமூக இடைவெளி கடைப்பிடித்து வழங்கவுள்ளனர். எனவே பயனாளிகள் களப்பணியாளர்கள் கொண்டுவரும் கிருமிநாசினி கொண்டு கைகளை சுத்தமாக கழுவிடவும், முககவசம் அணிந்திருக்கவும் வேண்டும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

(2) மேலும் ஒப்புதல் புத்தகத்தில் கைரேகை / கையொப்பம் அளித்த பின்பும் கிருமி நாசினி / சோப்பு கொண்டு கைகளை நன்றாக கழுவிட வேண்டும். எனவே உதவித்தொகை பெறும் பயனாளிகள் யாரும், அவர்களின் வீட்டை விட்டு உதவித்தொகை பெறுவதற்காக வங்கிக்கோ, அல்லது, அஞ்சலகத்திற்கோ, வங்கியாளர் சேவை மையத்திற்கோ செல்ல வேண்டாம் என தெரிவிக்கப்படுகிறது.

உதவித்தொகை பெறுவதில் ஏதேனும் சிரமம் ஏற்பட்டால் மாவட்ட கட்டுப்பாட்டு அறை எண். 0451-1077 என்ற எண்ணிற்கோ அல்லது தனித்துணை ஆட்சியர் சமூக பாதுகாப்புத் திட்டம் செல் எண். 9445461735-ல் தெரிவிக்கலாம் எனவும் உதவித்தொகை பெறும் பயனாளிகள் தற்போது கொரானா பாதிப்பு உள்ளதால், யாரும் வீட்டை விட்டு செல்ல வேண்டாம் எனவும், உங்களுக்கான மாத உதவித்தொகை நேரடியாக வழங்கப்படும் என்பதால் பயனாளிகள் யாரும், வீட்டை விட்டு செல்ல வேண்டாம் என திண்டுக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.மு.விஜயலட்சுமி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

—————————————————————————————————————————————————————————————-
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.
—————————————————————————————————————————————————————————————-