மூடு

கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம்

வெளியிடப்பட்ட தேதி : 27/05/2022

செ.வெ.எண்:-50/2022

நாள்:26.05.2022

திண்டுக்கல் மாவட்டம்

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி பள்ளிகளில் குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009-ன்படி, 2022-2023ஆம் கல்வியாண்டில் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு குறைந்தபட்சம் 25Ð இடஒதுக்கீட்டின்படி சேர்க்கைக்கான இணையதளத்தில் 20.05.2022 முதல் 25.05.2022 வரை 193 பள்ளிகளுக்கு 5915 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.

இதில் 126 பள்ளிகளில் ஒதுக்கீடு செய்யப்பட்ட இடங்களுக்கு மேல் பெறப்பட்ட விண்ணப்பங்களுக்கு தலைமையாசிரியர்கள் / வட்டாரக்கல்வி அலுவலர்கள் / வட்டார வளமைய பயிற்றுநர்கள் / மெட்ரிக் / நர்சரி & பிரைமரி பள்ளி முதல்வர்கள் / வருவாய்துறை பணியாளர்கள் ஆகியோர் அடங்கிய குழுவின் முன்னிலையில் 30.05.2022 அன்று திங்கள் கிழமை காலை 9.00 மணியளவில் அந்தந்த பள்ளிகளில் குலுக்கல் முறையில் தெரிவு செய்து சேர்க்கை நடை பெறும் எனவும், குலுக்கலில் பங்கேற்கும் பெற்றோர்கள் போதுமான சமூக இடைவெளியுடன் முகக்கவசம் அணிந்து கலந்து கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு திண்டுக்கல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திரு.சீ.கருப்புசாமி அவர்கள் தெரிவித்துள்ளார்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.