மூடு

காலை 06.00 மணி முதல் மதியம் 01.00 வரை பேக்கரிகள் செயல்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மு.விஜயலட்சுமி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

வெளியிடப்பட்ட தேதி : 13/04/2020

செ.வெ.எண்:-34/2020 நாள்:13.04.2020
திண்டுக்கல் மாவட்டம்

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி முதியவர்கள் மற்றும் நோயாளிகளின் தேவையை கருத்தில் கொண்டு காலை 06.00 மணி முதல் மதியம் 01.00 வரை பேக்கரிகள் செயல்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மு.விஜயலட்சுமி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

————————————————————————————————————————————-

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவாமல் தடுத்து தமிழக மக்களை காத்திட பல்வேறு வழிகாட்டுதலை வழங்கி செயல்படுத்திட உத்தரவிட்டுள்ளார்கள். திண்டுக்கல் மாவட்டத்தில் பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் எளிதில் கிடைத்திடும் வகையிலும், சமூக விலகலை கடைபிடித்திடும் வகையிலும் காலை 06.00 மணி முதல் மதியம் 01.00 வரை அத்தியாவசிய பொருட்களான மளிகை கடைகள், காய்கறி கடைகள் திறக்க உத்தரவிட்டு, பொதுமக்களுக்கு தட்டுபாடு இன்றி கிடைத்திட வழிவகை செய்யப்பட்டுள்ளது.

மேலும், கண்காணிப்பில் உள்ள பகுதிகளில் (Containment Zone) உள்ள பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசிய பெருட்கள் அவர்களின் இருப்பிடங்களுக்கே சென்று வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதனை போன்று, பொதுமக்களில் முதியோர்கள், நோயாளிகள் மற்றும் குழந்தைகளின் ஆரோக்கியத்தினை மையமாக கொண்டு பேக்கரிகள் காலை 06.00 மணி முதல் மதியம் 01.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது. இக்கடைகளில் பிரட், பிஸ்கட் மற்றும் பிற உணவு பண்டங்கள் அமர்ந்து உண்பதற்கு அனுமதி கிடையாது. பார்சல் மட்டுமே விற்பனை செய்யப்படும். இக்கடைகளில் டீ, காபி மற்றும் குளிர்பானங்கள் விற்பனை செய்திட அனுமதி கிடையாது. பொதுமக்கள் பொருட்களை வாங்க செல்லும் போது கூட்டமாக நிற்காமல் சமூக இடைவெளியினை கடைபிடித்து, கொரோனா வைரஸ் தொற்று நோய் தடுப்பிற்கு அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைக்க வேண்டும்.

மேலும், பேக்கரி நிறுவனங்கள் தங்களது கடைகளை கிருமி நாசினி கொண்டு தினசரி சுத்தப்படுத்தி, பொதுமக்கள் எளிதில் பொருட்களை வாங்கி செல்வதற்கான நடவடிக்கையினை மேற்கொண்டு, சுகாதாரமான மற்றும் தரமான முறையில் பொருட்களை விற்பனை செய்திட வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மு.விஜயலட்சுமி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

—————————————————————————————————————————————————————————————-
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.
—————————————————————————————————————————————————————————————-