மூடு

குடியரசு தினவிழா அன்று அனைத்து ஊராட்சிகளிலும் நடைபெறும் கிராமசபை கூட்டத்தில் கிராமப்புறங்களில் அமைந்துள்ள அனைத்து நியாய விலை கடைகளின் கணக்குகள், செயல்பாடுகள் மற்றும் தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம் 2013-ன்படி கணக்கெடுப்பு செய்யப்பட்ட விபரங்கள் முதலியன சமூக தணிக்கைக்காக சமர்ப்பிக்கப்படுகிறது – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மு.விஜயலட்சுமி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

வெளியிடப்பட்ட தேதி : 22/01/2020

செ.வெ.எண்:-38/2020 நாள்:21.01.2020
திண்டுக்கல் மாவட்டம்

குடியரசு தினவிழா அன்று அனைத்து ஊராட்சிகளிலும் நடைபெறும் கிராமசபை கூட்டத்தில் கிராமப்புறங்களில் அமைந்துள்ள அனைத்து நியாய விலை கடைகளின் கணக்குகள், செயல்பாடுகள் மற்றும் தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம் 2013-ன்படி கணக்கெடுப்பு செய்யப்பட்ட விபரங்கள் முதலியன சமூக தணிக்கைக்காக சமர்ப்பிக்கப்படுகிறது – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மு.விஜயலட்சுமி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

திண்டுக்கல் மாவட்டத்தில் 26.1.2020 குடியரசு தினவிழா அன்று அனைத்து ஊராட்சிகளிலும் நடைபெறும் கிராமசபை கூட்டத்தில் இம்மாவட்டத்தில் பொது விநியோகத்திட்டத்தின் கீழ் செயல்படும் கிராமப்புறங்களில் அமைந்துள்ள அனைத்து நியாய விலைக்கடைகளின் கணக்குகள், செயல்பாடுகள் மற்றும் தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம் 2013-ன்படி கணக்கெடுப்பு செய்யப்பட்ட விபரங்கள் (முன்னுரிமை வீட்டுப் பட்டியல் மற்றும் முன்னுரிமையல்லாத வீட்டுப் பட்டியல்) முதலியன சமூக தணிக்கைக்காக மேற்படி கிராமசபை கூட்டத்தில் சமர்ப்பித்து மேம்படுத்தப்பட்டு ஒப்புதல் பெறப்படவுள்ளது.

இந்த நிகழ்வில் நியாய விலைக் கடை விற்பனையாளர்கள், சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்து கொள்வார்கள். பொதுமக்கள் அனைவரும் கிராமசபை கூட்டத்தில் கலந்து கொண்டு பொதுவிநியோகத்திட்டம் சிறப்பாக நடைபெற உரிய ஆலோசனைகள் வழங்கலாம் என திண்டுக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர்; திருமதி மு.விஜயலட்சுமி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம், திண்டுக்கல்