மூடு

கூட்டுறவு வங்கிகளில் தகுதியான அனைத்து விவசாயிகளுக்கும் விவசாய கடன்கள் வழங்கப்படும் 68-வது கூட்டுறவு வார துவக்க விழாவில் மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள், தகவல்

வெளியிடப்பட்ட தேதி : 15/11/2021
.

.

செ.வெ.எண்:-29/2021

நாள்:14.11.2021

கூட்டுறவு வங்கிகளில் தகுதியான அனைத்து விவசாயிகளுக்கும் விவசாய கடன்கள் வழங்கப்படும் 68-வது கூட்டுறவு வார துவக்க விழாவில் மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள், தகவல்

திண்டுக்கல் மாவட்டத்தில் 68-வது கூட்டுறவு வார துவக்க விழா, மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், பழநி சட்டமன்ற உறுப்பினர் திரு.இ.பெ.செந்தில்குமார் அவர்கள், வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ச.காந்திராஜன் அவர்கள், கூடுதல் பதிவாளரும் / மேலாண்மை இயக்குநருமான திரு.கோ.க.மாதவன் ஆகியோர் முன்னிலையில், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி வளாகத்தில் இன்று (14.11.2021) நடைபெற்றது.

விழாவில் மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள், கூட்டுறவு கொடியினை ஏற்றி வைத்து, கூட்டுறவு உறுதி மொழி ஏற்று, மரக்கன்றுகளை நட்டு வைத்து, தெரிவித்தாவது:-

மாண்புமிகு தமிழக முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் அரசு பொறுப்பு ஏற்றவுடன் ஏழை, எளிய மக்களுக்கு, கூட்டுறவுத்துறை மற்றும் உணவு துறையின் மூலமாக பல்வேறு நலத்திட்டங்களை கொண்டு சேர்ப்பதற்கு ஆணையிட்டு அதன் அடிப்படையில் நலத்திட்டங்கள் அணைத்தும் பொதுமக்களுக்கு சென்றடைகிறது. மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் கொரோணா காலகட்டத்தில் குடும்ப அட்டைதார்களுக்கு ரூ.4000/- வழங்க ஆணையிட்டு அதன் அடிப்படையில் விவசாயிகளுக்கு முழுவதும் வழங்கப்பட்டு சாதனை படைத்துள்ளது. மேலும் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் 14 வகையான மளிகை பொருட்கள் வழங்க ஆணையிட்டு முழுவதுமாக குடும்ப அட்டை வைத்திருக்கும் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.

மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் அரசு பொறுப்பு ஏற்றவுடன் பொது நகை கடனாக 5 பவுன் நகை அடமானம் வைத்திருக்கும் அனைவருக்கும், ரூ.6 ஆயிரம் கோடிக்கு மேல் தள்ளுபடி செய்யப்பட்டு. சுமார் 16 இலட்சம் விவசாயிகள் மற்றும் ஏழை, எளிய நடுத்தர மக்கள் பயனடைந்துள்ளனர். இந்தியாவில் எந்த மாநிலத்திலும் பொது நகை கடன் தள்ளுபடி செய்யப்படவில்லை. ஆனால் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் ஆணைக்கினங்க கூட்டுறவுத்துறையின் மூலம் பொது நகை கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இந்த துறையின் இருக்ககூடிய 4 ஆயிரம் காலிப்பணிடங்கள் விரைவில் நிறப்பப்படும். மேலும் விவசாயிகளுக்கு மீண்டும் விவசாய கடன் வழங்கப்படவுள்ளது. தற்போதயை கொரோணா கால கட்டத்தில் மகளிர் நலன் கருதி இக்கடன் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. கிராமங்களில் உள்ள 4,451 கடன் சங்கங்கள் மூலம் மாவட்ட வங்கியோடு அதன் கீழ் செயல்படும் கிளை வங்கிகள் ஒன்றுக்கொன்று இணைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்கள் கடன் விவரங்களையும், கடன்களை திருப்பி செலுத்தும் தொகையின் விவரங்களையும் தங்கள் வங்கி கணக்கிலிருந்து எளிதில் அறிந்து கொள்ள முடியும்,

ஒரு சில தனிநபர்கள் நிறைய கூட்டுறவு வங்கிகளில் கடன் பெற்றிருப்பது, கண்டுபிடிக்கப்பட்டு அவர்களின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கூட்டுறவுத்துறையின் அதிகாரிகளை கொண்டு இவை அனைத்தும் ஆய்வு செய்யப்பட்டு போலி நகைகள் அடமானம் வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டள்ளது. இதற்கு உடந்தையாக இருந்து வங்கி ஊழியர்களின் மீது துறை ரீதியாகவும், கிரிமினல் நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும் வங்கிகளில் அடமானம் வைக்கப்பட்டுள்ள நகைகள் அனைத்தும் நகைகளின் தரம் குறித்து ஆய்வு செய்யப்படவுள்ளது. தமிழக அரசின் இதுபோன்ற கடன் உதவிகள் உண்மையான விவசாயிகளுக்கு சென்றடையும் வகையில் கூட்டுறவுத்துறை பல்வேறு சிறப்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கூட்டுறவு கடைகளில் பொருட்கள் அனைத்தும் தரமான பொருட்களாக நியாமான விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கூட்டுறவுத்துறை பொதுமக்களின் சொத்தாகும் இதனை பாதுகாக்க அரசு கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. சுய உதவி குழுக்களுக்கு குறைந்த வட்டியில் கடன் உதவி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டகளில் பயிர்சேதம் குறித்து கணக்கிடப்பட்டு வருகிறது. கணக்கெடுப்பு முடிந்தவுடன் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் கவனத்திற்கு எடுத்துச் சென்று அதற்குரிய இழப்பீடு வழங்கப்படும். என்று மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள் தெரிவித்தார்கள்.

இந்நிகழ்ச்சியில், துணைப்பதிவாளர் (பொது விநியோகத்திட்டம்) திரு.மு.திருமாவளவன், மேலாண்மை இயக்குநர் திரு.ம.செல்வகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்கள்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.