மூடு

கேலோ இந்தியா திட்டத்தின் கீழ், கால்பந்து விளையாட்டிற்கான பயிற்சி வகுப்புக்கு மாணவ, மாணவிகளை தேர்வு செய்வதற்கான உடற்திறன் தேர்வு திண்டுக்கல் மலைக்கோட்டை விளையாட்டு மைதானத்தில் 02.03.2023 அன்று நடைபெறவுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

வெளியிடப்பட்ட தேதி : 10/03/2023

செ.வெ.எண்:-60/2023

நாள்:-28.02.2023

கேலோ இந்தியா திட்டத்தின் கீழ், கால்பந்து விளையாட்டிற்கான பயிற்சி வகுப்புக்கு மாணவ, மாணவிகளை தேர்வு செய்வதற்கான உடற்திறன் தேர்வு திண்டுக்கல் மலைக்கோட்டை விளையாட்டு மைதானத்தில் 02.03.2023 அன்று நடைபெறவுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

கேலோ இந்தியா திட்டத்தின் கீழ், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், திண்டுக்கல் மலைக்கோட்டை விளையாட்டு மைதானத்தில் கால்பந்து விளையாட்டிற்கு கேலோ இந்தியா மையம் அமைக்கப்பட்டுள்ளது. இம் மலைக்கோட்டை விளையாட்டு மைதானத்தில் பள்ளி மாணவ, மாணவிகளை தேர்வு செய்து அவர்களுக்கு ஒரு மாதத்திற்கு 25 நாட்கள் (ஞாயிற்றுகிழமை தவிர) காலை மற்றும் மாலை நேரங்களில் தொடர்ந்து 1 வருடத்திற்கு மலைக்கோட்டை விளையாட்டரங்கத்தில் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. அவ்வாறு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் மற்றும் விளையாட்டு சீருடைகள் போன்றவை வழங்கப்படும்.

மேற்காணும் கால்பந்து பயிற்சி வகுப்பிற்கு மாணவ, மாணவிகளை தேர்வு செய்வதற்கான உடற்திறன் தேர்வு 02-03-2023 அன்று காலை 9.00 மணிக்கு திண்டுக்கல் மலைக்கோட்டை விளையாட்டு மைதானத்தில் நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்ள விருப்பம் உள்ள திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் மேற்காணும் தேதியில் மலைக்கோட்டை விளையாட்டு மைதானத்தில் ஆஜராகி பயன்பெறலாம்.

மேலும் விபரங்களுக்கு, ”மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர், மாவட்ட விளையாட்டரங்கம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் தாடிக்கொம்பு ரோடு, திண்டுக்கல் ” என்ற முகவரியில் நேரிலோ அல்லது தொலைபேசி எண் : 7401703504 வாயிலாகவோ தொடர்புகொண்டு தெரிந்துகொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.