மூடு

கொரோனா வைரஸ் நோய் தடுப்பு நடவடிக்கை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்

வெளியிடப்பட்ட தேதி : 23/03/2020
corono-1

செ.வெ.எண்:-25ஃ2020 நாள்:20.03.2020
திண்டுக்கல் மாவட்டம்

திண்டுக்கல் மாவட்டத்தில்; கொரோனா வைரஸ் நோய் தடுப்பு நடவடிக்கையாக தனியார் வாகனங்களில் கிருமிநாசினி தெளிப்பு பணிகள் மற்றும் தனியார் ஓட்டுநர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மு.விஜயலட்சுமி, இ.ஆ.ப., அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்.

————————————————————————————————————————————-

திண்டுக்கல்லில் கொரோனா வைரஸ் நோய் தடுப்பு நடவடிக்கையாக தனியார் வாகனங்களில் கிருமிநாசினி தெளிப்பு பணிகள் மற்றும் ஓட்டுநர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மு.விஜயலட்சுமி, இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு தெரிவித்ததாவது:

திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் நோய் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுகுறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணிகளும் தொடர்ந்து சீரிய முறையில் துறை அலுவலர்கள் மேற்கொண்டு வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் திரையரங்குகளுக்கு 31.3.2020 வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வணிக வளாகங்கள் மற்றும் மக்கள் கூடும் இடங்களான கோவில்கள், மசூதிகள், தேவாலயங்கள் ஆகியவற்றில் தூய்மைப்படுத்தும் பணிகளை தீவிரமாக மேற்கொள்ளவும், இப்பணிகளை கண்காணிக்க தனி அலுவலர்கள் நியமிக்கப்;பட்டு, தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

திண்டுக்கல் வட்டார போக்குவரத்து அலுவலர்கள் மூலம் பொதுமக்கள் பயன்படுத்தும் தனியார் வாகனங்கள், ஆட்டோக்கள், சேர்ஆட்டோக்கள், தனியார் பேருந்துகள், வாடகை கார்கள் மற்றும் பள்ளி வாகனங்களில் கிருமிநாசினி மருந்து தெளிக்கும் பணி தொடர்ந்து வட்டார போக்குவரத்து அலுவலர்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்த வைரஸ் தடுப்பு நடவடிகைகளுக்காக பயன்படுத்தப்படும் முகக்கவசம், மருத்துவப் பொருட்களை நிர்ணயிக்கப்பட்ட விலையைவிட அதிக விலைக்கு விற்பனை செய்பவர்கள் மற்றும் கொரோனா வைரஸ் குறித்து தவறான தகவல்களை சமூக வலைதளங்களில் பரப்புபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

பொதுமக்கள் அனைவரும் தனிநபர் சுகாதாரத்தினை பேணவும், குறிப்பாக வீட்டிற்குள் நுழையும் போதும், அவ்வப்போதும் கைகளை சோப்பு போட்டு சுத்தமாக கழுவுவதை உறுதி செய்ய வேண்டும். கைகளை சுத்தம் செய்யாமல், முகத்தை தொட வேண்டாம். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் விடுமுறை நாட்களின்போது குழுவாக விளையாடாதவாறு கண்காணிக்கவும், வீட்டிற்குள் நுழைந்தவுடனும், அவ்வப்போதும் கைகளை சோப்பு போட்டு சுத்தமாக கழுவுவதை உறுதி செய்ய வேண்டும். பொதுமக்கள் கூட்டம் அதிகமாக கூடும் இடங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும். பொதுவாக மற்றவர்களுடன் கைகுழுக்குவது போன்ற நடவடிக்கைகளை தவிர்க்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மு.விஜயலட்சுமி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்;.

இந்த ஆய்வின்போது, வட்டார போக்குவரத்து அலுவலர் திரு.சுரேஷ், வட்டார போக்குவரத்து ஆய்வாளர் திரு.விஜயகுமார் உட்பட துறை அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

—————————————————————————————————————————————————————————————-
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.
—————————————————————————————————————————————————————————————-