மூடு

கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கை ஊரடங்கு காலங்களில் உதவி தேவைப்படும் மாற்றுத்திறனாளிகள் 1800-4250-111 என்ற இலவச தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மு.விஜயலட்சுமி,இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

வெளியிடப்பட்ட தேதி : 06/04/2020

செ.வெ.எண்:-17/2020 நாள்:06.04.2020
திண்டுக்கல் மாவட்டம்

கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கை ஊரடங்கு காலங்களில் உதவி தேவைப்படும் மாற்றுத்திறனாளிகள் 1800-4250-111 என்ற இலவச தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மு.விஜயலட்சுமி,இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

————————————————————————————————————————————-

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி, திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் நோய் தடுப்பு நடவடிக்கைகள் போர்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பொதுமக்களுக்கு 144 தடை உத்தரவின் காரணமாக அத்தியாவசிய பொருட்கள் எளிதில் கிடைக்கும் வகையிலும், காய் கறி கடைகள் மற்றும் மளிகை கடைகள் பொருட்கள் வாங்கும் போது நோய் தொற்று பரவாமல் தடுத்திடும் பொருட்டு சமூக இடைவெளி ஏற்படுத்தப்பட்டு பொருட்கள் விற்பனை செய்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளன.

ஆதரவற்றவர்கள் பயன்பெறும் வகையில் அம்மா உணவகத்தில் குறைந்த விலையில் தரமான சுவையான உணவுகள் வழங்கப்பட்டு வருகிறது. தமிழக அரசின் சார்பில் ஏழை, எளிய மற்றும் ஆதரவற்ற பொதுமக்களுக்கு விலையில்லாமல் 3 வேளையும் சுவையான உணவு வழங்கப்படுகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் தூய்மைப் பணியாளர்கள் 740 நபர்கள், சாலையோரம் குடியிருக்கும் வாழ்வாதாரமற்ற 210 நபர்களுக்கும், வெளிமாநிலத்தவர் 7 நபர்கள் என மொத்தம் 957 நபர்களுக்கு அம்மா உணவகம் மூலமாக தினந்தோறும் 3 வேளையும் உணவு வழங்கப்படுகிறது.

இதே போன்று, மாற்றுதிறனாளிகளும் ஊரடங்கு உத்தரவால் பாதிக்கபட்டுவிட கூடாது என்பதற்காக தமிழக அரசு 1800-4250-111 என்ற Help Line எண்ணை அறிவித்துள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி தேவைப்பட்டால் தமிழக அரசு அறிவித்துள்ள தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம். திண்டுக்கல் மாவட்டத்தில் பல்வேறு இடங்களிலிருந்து Help Line எண்ணை தொடர்பு கொண்ட கண் பார்வையற்ற மாற்றுதிறனாளிகள் உட்பட 79 மாற்றுத்திறனாளிகளுக்கு அவர்களின் இருப்பிடத்திற்கே சென்று நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது.

எனவே, திண்டுக்கல் மாவட்டத்தில்; உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி தேவைப்பட்டால் 1800-4250-111 என்ற Help Line எண்ணை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மு.விஜயலட்சுமி,இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.

—————————————————————————————————————————————————————————————-
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.
—————————————————————————————————————————————————————————————-