மூடு

கோவில் பாதுகாப்பு பணிக்கு, தகுதியான முன்னாள் படைவீரர்கள்/முன்னாள் ஓய்வு பெற்ற காவலர்களை தேர்வு செய்ய, மாவட்ட காவல் அலுவலகத்தில் 06.04.2022 அன்று நேர்காணல் நடைபெறவுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

வெளியிடப்பட்ட தேதி : 05/04/2022

செ.வெ.எண்:-07/2022

நாள்:04.04.2022

திண்டுக்கல் மாவட்டம்

கோவில் பாதுகாப்பு பணிக்கு, தகுதியான முன்னாள் படைவீரர்கள்/முன்னாள் ஓய்வு பெற்ற காவலர்களை தேர்வு செய்ய, மாவட்ட காவல் அலுவலகத்தில் 06.04.2022 அன்று நேர்காணல் நடைபெறவுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தகவல்.திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கோவில் பாதுகாப்பு பணிக்கு (Temple Protection Force) தகுதியான முன்னாள் படைவீரர்கள்ஃமுன்னாள் ஓய்வு பெற்ற காவலர்களை அவர்களின் வயது (62 வயதிற்கு மிகாமல்) மற்றும் உடல் தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்து காலியாக உள்ள 31 திருக்கோவில்களில் பாதுகாப்பு பணிக்கு தொகுப்பு ஊதியம் (Consolidate pay) முறையில் பணி நியமனம் செய்யப்பட உள்ளனர்.எனவே, கோவில் பாதுகாப்பு பணிக்கு விருப்பம் தெரிவிக்கும் திண்டுக்கல், பழனி, வடமதுரை, கொடைக்கானல் பகுதிகளில் உள்ள முன்னாள் படைவீரர்கள்/முன்னாள் ஓய்வு பெற்ற காவலர்கள் 06.04.2022-ம் தேதி அன்று காலை 10.00 மணிக்கு மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெறும் நேர்காணலில் கலந்துகொண்டு பயன் பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.