மூடு

சாதாரண நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு, வாக்குச்சாவடி மையங்களுக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடத்தும் அலுவலர்களிடம் ஒப்படைக்கும் பணி மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் மேற்கொள்ளப்பட்டது.

வெளியிடப்பட்ட தேதி : 09/02/2022
.

செ.வெ.எண்:-18/2022

நாள்:-09.02.2022

சாதாரண நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு, வாக்குச்சாவடி மையங்களுக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடத்தும் அலுவலர்களிடம் ஒப்படைக்கும் பணி மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் மேற்கொள்ளப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டத்தில் சாதாரண நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு, வாக்குச்சாவடி மையங்களுக்கான மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் சுழற்சிமுறையில் ஒதுக்கீடு செய்யப்பட்டு, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடத்தும் அலுவலர்களிடம் ஒப்படைக்கும் பணி மாவட்ட தேர்தல் அலுவலர்ஃமாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப. அவர்கள் தலைமையில் இன்று (09.02.2022) மேற்கொள்ளப்பட்டது. இதுகுறித்து மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:-

தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய அறிவிக்கை மற்றும் அறிவுரைகளின்படி, திண்டுக்கல் மாவட்டத்தில் சாதாரண நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்களை, கோவிட்-19 பெருந்தொற்று தொடர்பான நிலையான இயக்கு செயல்முறைகளை பின்பற்றி சமூக இடைவெளி மற்றும் பெருந்தொற்று தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு சுதந்திரமாகவும், நேர்மையாகவும் நடத்திட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

திண்டுக்கல் மாவட்டத்தில், 1 மாநகராட்சி, 3 நகராட்சிகள் மற்றும் 23 பேரூராட்சிகளுக்கு தேர்தல் நடத்தப்படவுள்ளது. அதன்படி,நேரடித்தேர்தல் திண்டுக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட 48 வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கும், 3 நகராட்சிகளுக்குட்பட்ட மொத்தம் 75 வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கும், 23 பேரூராட்சிகளுக்கு உட்பட்டமொத்தம் 363 வார்டுஉறுப்பினர் பதவியிடங்களுக்கும் என மொத்தம் 486 பதவியிடங்களுக்கான நகர்ப்புறஉள்ளாட்சிபிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். அதற்காக மாவட்டம் முழுவதும் 486 வார்டுகளில் மொத்தம் 747 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்படவுள்ளன. வாக்குப்பதிவு மையங்களில் பணிபுரிவதற்காக 3,586 வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு தேர்தல் தொடர்பான பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது.

வாக்குப்பதிவுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படவுள்ளது. 747 வாக்குச்சாவடி மையங்களில் வாக்குப்பதிவிற்கு பயன்படுத்துவதற்காக 3,000 வாக்குப்பதிவு கருவிகள்(Control Unit), 1,500 கட்டுப்பாட்டு கருவிகள்(Ballot Unit) முதல்நிலை ஆய்வு மேற்கொள்ளப்பட்டு தயார் நிலையில் உள்ளன.

வாக்குப்பதிவு வரும் 19.02.2022 அன்று நடைபெறுகிறது. இதை முன்னிட்டு 06.01.2022 அன்று முதலாவது சுழற்சிமுறையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்; ஒதுக்கீடு செய்யப்பட்டது. தற்போது வேட்பாளர்களால் வேட்புமனுதாக்கல் செய்யப்பட்டதில், 8 வார்டுகளில் போட்டியின்றி வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்ட நிலையில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சுழற்சி முறையில் ஒதுக்கீடு செய்யும் பணி அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் நடைபெற்றது. அதன்படி, வாக்குப்பதிவிற்கு பயன்படுத்துவதற்காக 894 வாக்குப்பதிவு கருவிகள்(Ballot Unit), 894 கட்டுப்பாட்டு கருவிகள்(Control Unit) ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு மேற்காணும் விவரப்படி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள மின்னணுவாக்குப் பதிவு இயந்திரங்கள் (EVM) யாவும் இன்று(09.02.2022) ஒப்படைப்பு செய்யப்படுகிறது. அதனைத்தொடர்ந்து, தேர்தல் நடத்தும் அலுவலர்களால் 3வது சுழற்சி முறை வேட்பாளர்கள் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர் பெயர் மற்றும் சின்னம் பொருத்தும் பணி மேற்கொள்ளப்பட்டு, பணி நிறைவடைந்தவுடன் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பான அறையில் வைக்கப்படும். பின்னர் ஒதுக்கீடு செய்யப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தேர்தல் நாளுக்குமுன்னர் அந்தந்த வாக்குச்சாவடிகளுக்கு பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்படும் என மாவட்டதேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப.,அவர்கள் தெரிவித்தார்கள்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) திருமதி மு.ராணி, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் தேர்தல் பணியில் உள்ள பணியாளர்கள் உட்பட பலர் கலந்துகொண்டார்கள்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.