மூடு

சுதந்திரத்திருநாள் அமுதப் பெருவிழா- அமைதி மற்றும் ஒற்றுமைக்கான மாவட்ட அளவிலான மாபெரும் யோகா நிகழ்ச்சி

வெளியிடப்பட்ட தேதி : 10/12/2021
.

.

செ.வெ.எண்:-27/2021

நாள்:09.12.2021

சுதந்திரத்திருநாள் அமுதப் பெருவிழா- அமைதி மற்றும் ஒற்றுமைக்கான மாவட்ட அளவிலான மாபெரும் யோகா நிகழ்ச்சி – மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் துவக்கி வைத்து பார்வையிட்டார்கள்.

சுதந்திரத்திருநாள் அமுதப் பெருவிழா (AZADI KA AMRIT MAHOTSAV) சுதந்திரத்தின் 75-வது ஆண்டு விழா கொண்டாட்டங்கள் திண்டுக்கல் மாவட்டத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் அமைதி மற்றும் ஒற்றுமைக்கான மாவட்ட அளவிலான மாபெரும் யோகா நிகழ்ச்சி, திண்டுக்கல் மாவட்ட விளையாட்டு மைதான வளாகத்தில் உள்ள உள்விளையாட்டரங்கில், மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் இன்று(09.12.2021) துவக்கி வைத்து பார்வையிட்டார்கள்.

பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த சுமார் 500 மாணவி, மாணவிகள் யோகா பயிற்சி செய்தனர். பயிற்சியில் கலந்கொண்ட அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் பாராட்டுச் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்கள்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது) திரு.சி.மாறன், விளையாட்டு அலுவலர்(பொறுப்பு) திருமதி லதா, யோகா நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் திரு.ராஜகோபால் உட்பட பலர் கலந்துகொண்டார்கள்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.