மூடு

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் – ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு (தொகுதி 2) பதவிகளுக்கான முதல்நிலை எழுத்துத் தேர்வு நடத்துவதற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

வெளியிடப்பட்ட தேதி : 04/09/2024
.

செ.வெ.எண்:- 87/2024

நாள்: 31.08.2024

திண்டுக்கல் மாவட்டம்

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் – ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு (தொகுதி 2) பதவிகளுக்கான முதல்நிலை எழுத்துத் தேர்வு நடத்துவதற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம்–ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு (தொகுதி 2) பதவிகளுக்கான முதல்நிலை எழுத்துத் தேர்வு முன்னேற்பாடு தொடர்பாக துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:-

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்தும் ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு (தொகுதி 2) பதவிகளுக்கான முதல்நிலை எழுத்துத் தேர்வு 14.09.2024 அன்று நடைபெறவுள்ளது. தேர்வானது காலை 09.30 மணி முதல் 12.30 மணி வரை நடைபெறும். தேர்வாளர்கள் தேர்வு மையத்திற்கு காலை 08.30 மணிக்குள் வந்து தங்களது வருகை பதிவினை உறுதி செய்திட வேண்டும். தேர்வாளர்கள் தேர்வு மையத்திற்குள் 09.00 மணி வரை அனுமதிக்கப்படும்.

அதன்படி, திண்டுக்கல் வட்டத்தில் 60 தேர்வு கூடங்களில் 16,950 தேர்வர்களும், கொடைக்கானல் வட்டத்தில் 2 தேர்வு கூடங்களில் 369 தேர்வர்களும், பழனி வட்டத்தில் 21 தேர்வு கூடங்களில் 5,374 தேர்வர்கள் என மொத்தம் 83 தேர்வு கூடங்களில் மொத்தம் 22,693 தேர்வர்கள் தேர்வு எழுதவுள்ளனர். தேர்வினை 9 நடமாடும் கண்காணிப்பு குழுக்கள், 8 பறக்கும் படை அலுவலர்களும் நியமிக்கப்பட்டு தேர்வு மையங்களை கண்காணிக்கப்படும். அனைத்து தேர்வு மையங்களிலும் 1 காவலர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார். மேலும், அனைத்து தேர்வு மையங்களிலும் வீடியோ ஒளிப்பதிவு செய்யப்படும்.

தேர்வு மையங்களில் தேர்வர்கள் எவ்வித சிரமமின்றி தேர்வு எழுதுவதற்கு தேவையான குடிநீர் மற்றும் அடிப்படை வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன. மாற்றுதிறனாளிகளுக்கு கீழ்தளத்தில் அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்படுகிறது. தேர்வு மையங்களுக்கு சிறப்பு போக்குவரத்து வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன, என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.அ.பிரதீப், இ.கா.ப., மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் திரு.கோட்டைக்குமார், துணை ஆட்சியர்(பயிற்சி) செல்வி ராஜேஸ்வரி உட்பட அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.