மூடு

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம், திட்ட செயலாக்க கோட்டத்தில்

வெளியிடப்பட்ட தேதி : 25/02/2022

செ.வெ.எண்:-50/2022

நாள்:25.02.2022

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம், திட்ட செயலாக்க கோட்டத்தில் – PMAY(Urban) HFA (Housing of all) “அனைவருக்கும் வீடு” திட்டத்தின் கீழ் திண்டுக்கல் மாவட்டத்தில் பழனி நகராட்சி தாதநாயக்கன்பட்டி திட்டப்பகுதியில் புதிய 264 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டும் திட்டம் (AHP) செயல்படுத்தப்படவுள்ளது.

இத்திட்ட குடியிருப்புகளுக்கு பழனி நகராட்சி பகுதியில் அரசுக்கு சொந்தமான நீர்நிலை வகைப்பாடு கொண்டு ஆட்சேபகரமான நீர்நிலைகள், அரசுக்கு சொந்தமான இதர புறம்போக்கு நிலங்களில் குடியிருந்து வரும் ஆக்கிரமிப்பாளர்கள் மற்றும் நகர்ப்புற வீடற்ற பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினர்களுக்கும் (EWS) முன்னுரிமை அளித்து குடியிருப்புகள் ஒதுக்கீடு செய்ய மாவட்ட நிர்வாகத்தின் மூலம் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் பயனாளிகளுக்கு தனது பெயரிலோ அல்லது குடும்ப உறுப்பினர் பெயரிலோ வீடோ அல்லது வீட்டு மனையோ இருக்கக்கூடாது. பயனாளிகளுக்கு மாத வருமானம் ரூ.25,000-க்குள் இருக்க ணே;டும். பயனாளிகளுக்கான உத்தேச பங்குத்தொகையான ரூ.2,70,000-ஐ செலுத்த சம்மதம் தெரிவிக்க வேண்டும்.

இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் பயனாளிகள் குடும்பத்தலைவர் மற்றும் குடும்பத்தலைவி ஆகிய இருவருடைய ஆதார் நகல், பயனாளியின் வங்கி கணக்கு புத்தகம் நகல் ஆகியற்றுடன் பழனி நகராட்சி அலுவலகத்தில் 09.03.2022 மற்றும் 10.03.2022 ஆகிய நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும் சிறப்பு முகாமில் கலந்துகொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.