மூடு

தற்போதைய கொரோனா காலகட்டத்தில் நோய்களை குணப்படுத்துவதில் மூலிகை தாவரங்கள் முக்கிய பங்காற்றுகின்றது.

வெளியிடப்பட்ட தேதி : 29/12/2021
.

செ.வெ.எண்:-72/2021

நாள்: 28.12.2021

தற்போதைய கொரோனா காலகட்டத்தில் நோய்களை குணப்படுத்துவதில் மூலிகை தாவரங்கள் முக்கிய பங்காற்றுகின்றது.

தமிழ்நாடு மூலிகை தாவரங்கள் சாகுபடி மற்றும் சந்தைப்படுத்துதல் குறித்து விவசாயிகளுடன் வேடசந்தூர் சினேகா மஹாலில் நடைபெற்ற ஒருநாள் கருத்தரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தகவல்

தமிழ்நாடு மூலிகை தாவரங்கள் சாகுபடி மற்றும் சந்தைப்படுத்துதல் குறித்து விவசாயிகளுடன் ஒருநாள் கருத்தரங்கம் மருத்துவ தாவர வாரிய நிறுவனத் தலைவர் திரு.எஸ்.கணேஷ்,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், மாவட்ட வன அலுவலர் திரு.எஸ்.பிரபு, இ.வ.ப., அவர்கள் முன்னிலையில் திண்;டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் சினேகா மஹாலில் இன்று(29.12.2021) நடைபெற்றது.

நடைபெற்ற ஒருநாள் கருத்தரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றியதாவது:-

பொதுமக்கள் தற்போதைய கொரோனா காலகட்டத்தில், மூலிகை மருந்துகளை அதிகம் பயன்படுத்துகின்றார்கள். பொதுமக்கள் தற்போதைய நிலையில் மாற்று மருந்துகளை நோக்கி செல்கின்றார்கள். தற்போதைய கொரோனா காலகட்டத்தில், கபசுர குடிநீர், ஆடாதொடை, வைட்டமின் சி மற்றும் டி மருந்துகள் ஆகியவற்றை அதிகம் பயன்படுத்துகின்றார்கள். இதனால், கொரோனா உள்ளிட்ட பல்வேறு நோய்கள் கட்டுக்குள் உள்ளது. தற்போது குளிர் காலமாக இருப்பதால், நவபாஷண முறையில் மருந்துகள் தயாரிக்கப்பட்டு, அதனால் பல்வேறு நோய்கள் குணமடைந்து, நோய்கள் கட்டுப்பாட்டில் உள்ளது. எல்லா தாவரங்களுக்கும் மருத்துவ குணங்கள் உண்டு. அதனை தெரிந்து கொண்டு, தற்போதைய நோய்களை முற்றிலுமாக குணப்படுத்த முடியும். குறிப்பாக, அஸ்வகந்தா குறைந்த விலையில் கிடைப்பதோடு, அதிகமான நோய்களை குணப்படுத்தும், மருத்துவ குணம் சார்ந்த மூலிகையாக விளங்குகின்றது. எனவே, பொதுமக்கள் மூலிகை மருந்துகளை அதிமாக பயன்படுத்தி, நோய்களை குணப்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்கள்.

இந்நிகழ்ச்சியில், கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக பேராசிரியர் மரு.ராஜாமணி அவர்கள், வேடசந்தூர் ஆராய்ச்சி நிறுவன தலைவர் மரு.பி.மணிவேல் அவர்கள், சென்னை, கூடுதல் இயக்குநர் (தோட்டக்கலை) திரு.டி.சி.கண்ணன் அவர்கள், துணை இயக்குநர் (தேசிய மருத்துவ மூலிகை கழகம்) மரு.ஆர்.முருகேஸ்வரன் அவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்கள்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.