மூடு

திண்டுக்கல் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் (மகளிர்), தொழிற்பிரிவுகளில காலியாக உள்ள இடங்களுக்கு நேரடி சேர்க்கை(ஆகஸ்டு 2021-ஆண்டு) நடைபெற உள்ளது

வெளியிடப்பட்ட தேதி : 12/10/2021

செ.வெ.எண்:-28/2021

நாள்:12.10.2021

திண்டுக்கல் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் (மகளிர்), தொழிற்பிரிவுகளில காலியாக உள்ள இடங்களுக்கு நேரடி சேர்க்கை(ஆகஸ்டு 2021-ஆண்டு) நடைபெற உள்ளது-மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

திண்டுக்கல் அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் (மகளிர்), கீழ்க்கண்ட மகளிர்க்கான தொழிற்பிரிவுகளில் காலியாக உள்ள இடங்களுக்கு நேரடி சேர்க்கை(ஆகஸ்டு 2021-ஆண்டு) மூலம் 30.10.2021 வரை சேர்க்கை நடைபெற உள்ளது.

கம்மியர் கருவிகள் (Instrument Mechanic) 2 ஆண்டுகள் படிப்பு, தகவல் தொடர்பு தொழில்நுட்பம் மற்றும் சாதனங்கள் பராமரிப்பு (Information & communication Technology & System Maintenance) 2 ஆண்டுகள் படிப்பு, கணினி இயக்குபவர் மற்றும் திட்டமிடுதல் உதவியாளர் (Computer Operator and Programming Assistant) ஒரு ஆண்டு படிப்பு, டெஸ்க்டாப் பப்ளிசிங் ஆப்பரேட்டர் (Desktop Publishing Operator) ஓராண்டு படிப்பு, நவீன ஆடை வடிவமைப்பு தொழில்நுட்பம் (Fashion Design & Technology) ஓராண்டு படிப்பு ஆகிய தொழிற்பிரிவில் சேர 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தையல் வேலை தொழில்நுட்பம் (Sewing Technology) ஓராண்டு படிப்பு, அலங்கார பூத்தையல் தொழில்நுட்பம் (Surface Ornamentation Technique (Embroidery)) ஓராண்டு படிப்பு ஆகிய தொழிற்பிரிவில் சேர 8 அல்லது 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேற்கண்ட படிப்புகளுக்கு NCVT சான்றிதழ் வழங்கப்படும்.

திறன் மின்னனுவியல் தொழில்நுட்ப பணியாளர் (Technician Power Electronics System) 2 ஆண்டுகள் தொழிற்பிரிவில் சேர 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இதற்கு SCVT சான்றிதழ் வழங்கப்படும்.

தொழிற்பயிற்சியில் சேருவோருக்கு, மாதந்தோறும் உதவித்தொகை ரூ.750/-இ விலையில்லா மிதிவண்டி, விலையில்லா மடிகணினி, பஸ் பாஸ் வசதி, மகளிருக்கு உச்சகட்ட வயது வரம்பு இல்லை, மத்திய அரசின் NCVT சான்றிதழ் , விலையில்லா சீருடை மற்றும் தையற்கூலி, விலையில்லா பாடப்புத்தகங்கள், விலையில்லா காலணிகள், மொழித்திறன் மற்றும் கணினி பயிற்சி, விலையில்லா வரைபடக்கருவிகள், விலையில்லா அடையாள அட்டை, இலவச விடுதி வசதி உண்டு.

ஐ.டி.ஐ-ல் சேர விரும்புவோர் முதல்வர், அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் (மகளிர்), குள்ளனம்பட்டி, நத்தம் ரோடு, திண்டுக்கல், அவர்களை நேரில் தொடர்பு கொண்டு நேரடி சேர்க்கையில் கலந்துகொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.