மூடு

திண்டுக்கல் அரசினர் தொழிற்பயிற்சி நிலைத்தில் 2014 முதல் 2020-ஆம் ஆண்டு வரை பயின்று தேர்ச்சி பெற்ற பயிற்சியாளர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

வெளியிடப்பட்ட தேதி : 25/02/2022

செ.வெ.எண்:-44/2022

நாள்:24.02.2022

திண்டுக்கல் அரசினர் தொழிற்பயிற்சி நிலைத்தில் 2014 முதல் 2020-ஆம் ஆண்டு வரை பயின்று தேர்ச்சி பெற்ற பயிற்சியாளர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. அவ்வாறு வழங்கப்பட்ட தேசிய தொழிற்பிரிவின் சான்றிதழ்களில் உள்ள பயிற்சியாளர்களின் பெயர், தந்தையின் பெயர், தாயாரின் பெயர், புகைப்பட மாற்றம் மற்றும் பயிற்சி பெற்ற தொழிற் பெயரில் (Trade) உள்ள திருத்தங்கள் ஆகியவற்றை சரி செய்து கொள்ள 02-03-2022 தேதி வரையில் Grievance Portal-லில் விண்ணப்பிக்க அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. எனவே, நேரடியாக விண்ணப்பிக்க இதுவே கடைசி வாய்ப்பு என்றும் இனிமேல் இவ்வாய்ப்பு வழங்கப்பட மாட்டாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, 2014 லிருந்து 2020 வரை பயிற்சியாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அசல் தேசிய தொழிற் சான்றிதழ்களில் மேற்படி திருத்தங்கள் ஏதும் இருப்பின் http://www.ncvtmis.gov.in என்ற இணையதளத்தில் உடனடியாக விண்ணப்பித்து பயன்பெறலாம். அல்லது திண்டுக்கல் அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் திண்டுக்கல் முதல்வர் அவர்களை நேரில் அணுகி 28-02-2022-க்குள் திருத்தங்கள் செய்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன் இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.