மூடு

திண்டுக்கல் ஊராட்சி ஒன்றியம் அ.வெள்ளோடு கிராமத்தில் கலைஞரின் அனைத்து கிராம வேளாண் வளர்ச்சித்திட்ட முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் துவக்கி வைத்தார்

வெளியிடப்பட்ட தேதி : 11/05/2022
.

செ.வெ.எண்:-20/2022

நாள்: 10.05.2022

திண்டுக்கல் மாவட்டம்

திண்டுக்கல் ஊராட்சி ஒன்றியம் அ.வெள்ளோடு கிராமத்தில் கலைஞரின் அனைத்து கிராம வேளாண் வளர்ச்சித்திட்ட முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் துவக்கி வைத்தார்

திண்டுக்கல் ஊராட்சி ஒன்றியம், அ.வெள்ளோடு கிராமத்தில் கலைஞரின் அனைத்து கிராம வேளாண் வளர்ச்சித்திட்ட முகாம் இன்று(10.05.2022) நடைபெற்றது. இம்முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் துவக்கி வைத்தார். இம்முகாமில் வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, வேளாண்மை பொறியியல்துறை, கால்நடை பராமரிப்புத்துறை, வட்டார வளர்ச்சி அலுவலர்கள், வட்டாட்சியர், மாவட்ட தொழில் மையம் உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர்கள் பங்கேற்று, அரசின் திட்டங்கள் குறித்தும், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் இத்திட்டங்களை பெறுவது குறித்தும் விளக்கமாக எடுத்துக்கூறினார்.

இம்முகாமில், மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் பேசியதாவது:-

திண்டுக்கல் மாவட்டத்தில் அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின்கீழ் 2021-22ம் ஆண்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட கிராமங்களில், கலைஞரின் அனைத்து கிராம வேளாண் வளர்ச்சித் திட்டம் செயல்படுத்தப்பட்டது. அதனடிப்படையில் திண்டுக்கல் மாவட்டத்தில் 62 கிராமங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. திண்டுக்கல் ஊராட்சி ஒன்றியத்தில், கலைஞரின் அனைத்து கிராம வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் திண்டுக்கல் வட்டாரத்தில் அ.வெள்ளோடு, சீலப்பாடி, அடியனூத்து, பாலகிருஷ்ணாபுரம், செட்டிநாயக்கன்பட்டி 5 கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது.அதன்படி, இன்று(10.05.2022) தேர்வு செய்யப்பட்ட கிராமங்களில் அனைத்து துறைகளையும் உள்ளடக்கி சிறப்பு விவசாயிகள் முகாம் நடைபெற்றது. இந்த சிறப்பு முகாமில் பட்டா மாறுதல், வண்டல் மண் எடுத்திட அனுமதி பெறுதல், கிசான் கிரெடிட் கார்டு பெறுவது, கால்நடை சிகிச்சைக்கான தீர்வு பெறுவது, தொழில் கடனுதவி பெறுவது, மகாத்மா காந்தி வேலை உறுதி திட்டத்தில் வரப்பு கட்டுதல், பண்ணைக்குட்டைகள் அமைத்தல் உள்ளிட்ட திட்டங்கள் குறித்தும் துறை அலுவலர்கள், விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும் எடுத்துக்கூறினார்.

அ.வெள்ளோடு கிராமப்பகுதிகளில், 1500 எக்டேர் தரிசு நிலங்கள் உள்ளதாக கணக்கீடு செய்யப்பட்டுள்ளது. இப்பகுதி விவசாயிகள் தரிசு நிலங்களில் ஒரு போகமாவது புஞ்சை சாகுபடியை மேற்கொள்ள வேண்டும். இல்லையேனில், வேளாண்மை துறையின் மூலம் மரக்கன்றுகளை பெற்று நடவு செய்து வளர்த்திட வேண்டும். மரங்கள் நடடுவதற்கும் பல்வேறு மானிய திட்டங்கள் உள்ளது. வேளாண்மைத்துறையில் அவைகளை தெரிந்து கொண்டு பயன்பெற வேண்டும்.

மேலும், கலைஞரின் அனைத்து கிராம வேளாண் வளர்ச்சித்திட்டத்தின் கீழ் அ.வெள்ளோடு கிராமத்தில் ஒரே இடத்தில் அமைந்துள்ள தரிசு நிலங்கள் உள்ள பகுதியினை தேர்வு செய்து, அவற்றை விளை நிலமாக்கும் திட்டத்தின் அடிப்படையில் 8 விவசாயிகளை தேர்தெடுத்து, சுமார் 14 ஏக்கர் தரிசு நிலமும் தேர்வு செய்யப்பட்டு ஒரு தொகுப்பாக உருவாக்கப்பட்டுள்ளது. இவ்வாறு தேர்வு செய்யப்பட்ட தரிசு நிலங்களுக்கு போர்வெல் அமைத்து தரவேண்டி, போர்வெல் அமைக்கும் இடம் வேளாண் பொறியியல் துறை மூலம் கண்டறியப்பட்டுள்ளது. போர்வெல் அமைத்த பிறகு சாகுபடிக்கு தேவையான நீர் வசதியினை சொட்டுநீர் / தெளிப்புநீர் பாசன கருவிகள் மூலம் அமைத்துத்தர வேளாண்மை மற்றும் தோட்டக்கலைத்துறை மூலம் ஏற்பாடுகள் செய்யப்படும்.

இதுபோன்று, தமிழ்நாடு பண்ணை நிலங்களில் நீடித்த நிலையான பசுமை போர்வைத் திட்டத்தின்கீழ் 2 விவசாயிகளுக்கு 270 மரக்கன்றுகளும், முதலமைச்சரின் மானாவாரி மேம்பாட்டு இயக்கத்தின்கீழ், இக்கிராமத்தில் 100 ஏக்கர் பரப்பு தேர்வு செய்யப்பட்டு 40 விவசாயிகளுக்கு வேளாண் இடுபொருட்கள் ரூ.1,06,000ஃ- மதிப்பில் மான்யமாகவும், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை மூலமாக அ.வெள்ளோடு கிராமத்தில் கடந்தாண்டு 3 நபர்களுக்கு 1 எக்டேர் பரப்பளவில் காய்கறி பந்தல் அமைப்பதற்கு ரூ.2,00,000ஃ- மான்யமாகவும், மேலும், 1 பயனாளிக்கு ரூ.50,000ஃ- மதிப்பில் மண்புழு உரக்கூடம் மான்யமாகவும், வெங்காய பட்டறை அமைப்பதற்கு 1 பயனாளிக்கு ரூ.87,500ஃ- மதிப்பீட்டிலும் வழங்கப்பட்டுள்ளது. மேலும், இப்பகுதி விவசாயிகளுக்கு பட்டா மாறுதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் உடனடியாக நிரைவேற்றப்படும். மரக்கன்றுகள் இலவசமாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். அரசின் பல்வேறு திட்டங்களை பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் அறிந்து கொண்டு பெற்று பயனடைய வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து, 9 பயனாளிகளுக்கு கிசான் கிரெடிட் கார்ட் அட்டைகளும், வருவாய்துறையின் சார்பில் 1 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டாவும், உழவர் பாதுகாப்பு அட்டை 6 பயனாளிகளுக்கும், கால்நடை பராமரிப்புத்துறையின் மூலம் கால்நடைகளுக்கு தாதுஉப்பு 2 நபர்களுக்கும் நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்.

இம்முகாமில், வேளாண்மைத்துறை இணை இயக்குநர் திரு.பாண்டித்துரை, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(வேளாண்மை) திரு.ரவிபாரதி, உதவி இயக்குநர் (வேளாண்மை) திரு.நாகேந்திரன், உதவி இயக்குநர்(தோட்;டக்கலை) அலெக்ஸ் ஐசக், திண்டுக்கல் கிழக்கு வட்டாட்சியர் திருமதி.சுகந்தி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திரு.மலரவன், கால்நடைத்துறை துணை இயக்குநர் மரு.விஜயக்குமார், வேளாண் பொறியியல் துறை உதவி செயற்பொறியாளர் திரு.அழகேசன், அ.வெள்ளோடு ஊராட்சி தலைவர் திரு.இளங்கோ மற்றும் பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.