மூடு

திண்டுக்கல் மாநகராட்சி பகுதியில் சீரான குடிநீர் வழங்க குழாய்கள் அமைப்பதற்கு திண்டுக்கல் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.25 இலட்சத்தை மாண்புமிகு வனத்துறை அமைச்சர் திரு.திண்டுக்கல் சி.சீனிவாசன் அவர்கள் வழங்கினார்.

வெளியிடப்பட்ட தேதி : 16/09/2019
1

செ.வெ.எண்.32/2019 நாள்: 14.09.2019
திண்டுக்கல் மாவட்டம்

திண்டுக்கல் மாநகராட்சி பகுதியில் சீரான குடிநீர் வழங்க குழாய்கள் அமைப்பதற்கு திண்டுக்கல் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.25 இலட்சத்தை மாண்புமிகு வனத்துறை அமைச்சர் திரு.திண்டுக்கல் சி.சீனிவாசன் அவர்கள் வழங்கினார்.

திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகத்தில் மாண்புமிகு வனத்துறை அமைச்சர் திரு.திண்டுக்கல் சி.சீனிவாசன் அவர்கள் தலைமையில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.மு.விஜயலெட்சுமி இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் திண்டுக்கல் மாநகராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு சீரான முறையில் குடிநீர் வழங்குவது குறித்த ஆய்வுக்கூட்டம் இன்று (14.09.2019) திண்டுக்கல் மாநகராட்சி அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது.

ஆய்வின்போது, திண்டுக்கல் மாநகராட்சி 3 நகராட்சிகள், 23 பேரூராட்சிகள், 14 ஊராட்சிகள் உள்ள 306 ஊராட்சிப் பகுதிகளில் வசிக்கின்ற பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கும் முறை குறித்தும், குடிநீர்; பற்றாக்குறை உள்ள பகுதிகள், குடிநீர் ஆதாரப்பகுதிகள் குறித்தும், இனிவரும் காலங்களில் குடிநீரினை சீரான முறையில் வழங்குவது குறித்தும், வடகிழக்கு பருவமழையினையொட்டி குடிநீர்; ஆதாரத்தினை மேம்படுத்திட மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்தும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுடன் கலந்தாய்வு மேற்கொண்டார். ஆய்வுக்குப் பின், மாண்புமிகு வனத்துறை அமைச்சர் திரு.திண்டுக்கல் சி.சீனிவாசன் தெரிவித்ததாவது:

வடகிழக்கு பருவமழை துவங்கவுள்ள நிலையில் நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்தி, நீர் ஆதாரத்தினை பெருக்கி, தண்ணீரை சேமித்து, அதன் மூலம் பொதுமக்களின் குடிநீர் தேவையினை நிவர்த்தி செய்வதற்காக தமிழக அரசால் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்சமயம் மாநகராட்சிப் பகுதிகளில் குடிநீர்; விநியோகம் செய்வதில் உள்ள குறைபாடுகளை கண்டறிந்து, உடனடியாக நிவர்த்தி செய்திடவும், விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதிகளுக்கு குடிநீர் வழங்கிடவும், குடிநீர் விநியோக குழாய்களில் உள்ள பழுதுகளை நீக்கி, விரைந்து பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளவும், மாநகராட்சியில் உள்ள 48 வார்டுகளுக்கும் குடிநீர் விநியோகம் செய்திடவும், அதே போன்று ஊராட்சி பகுதிகளில் உள்ள அனைத்து கிராமங்கள், பேரூராட்சிப் பகுதிகளில் குடிநீர் வழங்குவதற்கும், காவிரி கூட்டுக்குடிநீர் திட்டம் இல்லாத பகுதிகளுக்கு புதிய நீராதாரத்தினை கண்டறிந்து ஆழ்துளை கிணறுகள் அமைத்து உடனடியாக குடிநீர் வழங்கிடவும், பழுதடைந்த ஆழ்துளை கிணறுகள், குழாய்களை சீரமைத்து தட்டுப்பாடு இன்றி பொதுமக்களுக்கு குடிநீர் வழங்க வேண்டும்.

மேலும் எந்தெந்தப்பகுதிகளில் குடிநீர் தேவையுள்ளதை அறிந்து நிரந்தர தீர்வுகாணும் வகையில், ஊரக பகுதி மற்றும் தமிழ்நாடு குடிநீர்; வடிகால் வாரியம் அலுவலர்கள், தேவையான குடிநீர்; பணிகளுக்கென திட்ட அறிக்கையினை தயார் செய்யவும், பொதுமக்களின் அன்றாட தேவையான குடிநீர் வழங்கும் பணியினை தொய்வு இல்லாதவாறு மேற்கொள்ள வேண்டும். முதலமைச்சரின் சிறப்பு குறைதீர்க்கும் திட்டத்தின் கீழ் நடைபெற்ற முகாம்களில் 20,000 த்திற்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டன அதில் தகுதியான மனுதாரர்களுக்கு அரசின் நலத்திட்டங்களையும், நிதயுதவிகளையும் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பிற மனுக்கள் தள்ளுபடி செய்யப்ட்டதற்கான காரணத்தை சம்மந்தப்பட்ட மனுதாரர்களுக்கு எழுத்துப்பூர்வமாக பதில்களை வழங்கவும், காவேரி கூட்டுக்குடிநீர் திட்ட வழிப்பாதையில், பழனி சாலையில் உள்ள நீரேற்ற தொட்டிக்கு புதிய குழாய்கள் அமைத்திட திண்டுக்கல் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.25.00 இலட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விரைந்து பணிகளை துவக்கிட சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுரைகள் மற்றும் ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

இக்கூட்டத்தில், வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர்.வி.பி.பி.பரமசிவம், திண்டுக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் திரு.வி.மருதராஜ், மாவட்ட வருவாய் அலுவலர் திரு.பா.வேலு, திண்டுக்கல் மாநகராட்சி ஆணையாளர் திரு.செந்தில்முருகன், திட்ட இயக்குநர் (மா.ஊ.வ.மு) திருமதி.கவிதா, உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) திரு.குருராஜன், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) திரு.அன்புமணி, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் செயற்பொறியாளர் திரு.பிரபுராம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

செய்தி வெளியீடு :- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்