மூடு

திண்டுக்கல் மாவட்டத்திற்கு காவல்துறை பார்வையாளராக திரு. மாக்ராண்ட் எம் ரானடே, இ.கா.ப., அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்.

வெளியிடப்பட்ட தேதி : 17/03/2021
policeob

செ.வெ.எண்:- 25/2021

நாள்:-16.03.2021

திண்டுக்கல் மாவட்டம்

திண்டுக்கல் மாவட்டத்திற்கு காவல்துறை பார்வையாளராக திரு. மாக்ராண்ட் எம் ரானடே, இ.கா.ப., அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல்-2021 நடைபெறுவதை முன்னிட்டு,திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் செலவின கணக்கு பார்வையாளர்கள் ஏற்கனவே வருகைப்புரிந்துள்ளனர்.

இந்நிலையில், திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளுக்கு காவல்துறை பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ள திரு. மாக்ராண்ட் எம் ரானடே, இ.கா.ப., அவர்கள் (Mr.MAKRAND M RANADE, I.P.S.)இன்று(16.03.2021) வருகை புரிந்துள்ளார்.

திண்டுக்கல் மாவட்டத்திற்குட்பட்ட 7 சட்டமன்ற தொகுதிகளில் தேர்தல் தொடர்பாக ஏதேனும் புகார்கள் இருப்பின் காவல்துறை பார்வையாளரை 8300340513 என்ற கைப்பேசி எண்ணில் தொடர்புகொண்டு பொதுமக்கள் தங்களின் புகார்களை தெரிவிக்கலாம் என திண்டுக்கல் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மு.விஜயலட்சுமி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.