மூடு

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல்கள் 2019 தொடர்பாக, கருத்து கேட்பு கூட்டம் 11.05.2019 அன்று காலை 11.00 மணியளவில் சம்மந்தப்பட்ட உள்ளாட்சி அலுவலகங்களில் மண்டல அலுவலர்கள் தலைமையில் நடைபெறவுள்ளது.

வெளியிடப்பட்ட தேதி : 09/05/2019

செ.வெ.எண்:-10/2019 நாள்:- 09.05.2019
திண்டுக்கல் மாவட்டம்

பத்திரிக்கை செய்தி

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல்கள் 2019 தொடர்பாக, 1 மாநகராட்சி, 3 நகராட்சிகள், 23 பேரூராட்சிகள் மற்றும் 14 ஊராட்சி ஒன்றியங்களில் வாக்குச்சாவடிகள் பட்டியல் இறுதி செய்யும் பொருட்டு, பொதுமக்கள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான கருத்து கேட்பு கூட்டம் 11.05.2019 அன்று காலை 11.00 மணியளவில் சம்மந்தப்பட்ட உள்ளாட்சி அலுவலகங்களில் மண்டல அலுவலர்கள் தலைமையில் நடைபெறவுள்ளது.

எனவே, மேற்கண்ட கருத்து கேட்பு கூட்டத்தில் வரைவு வாக்குச்சாவடிகள் பட்டியல் குறித்து கருத்துக்கள் / ஆட்சேபணைகள் தெரிவித்து மனுக்கள் வழங்கிய மனுதாரர்கள் மற்றும் அரசியல் கட்சி பிரதிநிதிகள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.டி.ஜி.வினய்.இ.ஆ.ப அவர்கள் தெரிவித்தார்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்