மூடு

திண்டுக்கல் மாவட்டத்தில் மிளகாய் பயிர் பாதுகாப்பு நடவடிக்கைகளை விவசாயிகள் மேற்கொள்ள தோட்டக்கலைத்துறை சார்பில் ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளது.

வெளியிடப்பட்ட தேதி : 21/02/2023

செ.வெ.எண்:-28/2023

நாள்:-13.02.2023

திண்டுக்கல் மாவட்டத்தில் மிளகாய் பயிர் பாதுகாப்பு நடவடிக்கைகளை விவசாயிகள் மேற்கொள்ள தோட்டக்கலைத்துறை சார்பில் ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் சுமார் 1,700 எக்டர் பரப்பளவில் மிளகாய் பயிர் சாகுபடி செய்யப்படுகிறது.

தற்போது, பனி மற்றும் குளிர் காலம் என்பதால் பருவநிலை மாற்றம் மற்றும் சீதோஷ்ண மாற்றம் காரணமாக மிளகாய் செடியில் சாம்பல் நோய் தாக்குதல் அதிகமாக இருக்கும். சாம்பல் நோயால் பாதிக்கப்பட்ட பயிரானது இலைப்பரப்பு உதிர்தல், இலையின் அடிப்புறம் வெள்ளை நிறப்பொடி போன்ற வளர்ச்சி காணப்படும். பாதிக்கப்பட்ட இலைகள் காய்ந்து. வேகமாக சுருங்கிவிடும் மற்றும் பூக்காம்புகள் குட்டை வளர்ச்சியுடன் உருமாறியும் காணப்படும். மண்ணில் உள்ள பயிர் குப்பைகளின் மீது இந்த பூஞ்சான் உயிர் வாழும் மற்றும் விதையின் மூலமும் பரவும், இந்த நோயை கட்டுப்படுத்த, வயலைச் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். நோய் எதிர்ப்புச் சக்தியுள்ள இரகங்களை பயிரிட வேண்டும். சரியான இடைவெளியில் பயிர் செய்ய வேண்டும். நோயின் ஆரம்ப அறிகுறியின்போது நனையும் கந்தகம் 0.25 சதவீதம் 15 நாள் இடைவெளியில் தெளிக்க வேண்டும். போஸ்டைல் அலுமினியம் 2.5 கிராம் / லிட்டர் (அல்லது) டினோகார்ப் 2.50 மில்லி / லிட்டர் (அல்லது) பிப்ரோநில் 2 மில்லி / ஜிட்டர் தண்ணீரில் கலந்து 15 நாள் இடைவெளியில் மூன்று முறை தெளித்தல் போன்ற இந்நோயின் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ள விவசாயிகளை கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மேலும் விபரங்களுக்கு அருகிலுள்ள தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு தெரிந்துகொள்ளவும் என திண்டுக்கல் தோட்டக்கலை துணை இயக்குநர் திரு. ஜோ.பெருமாள்சாமி தெரிவித்துள்ளார்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.