மூடு

திண்டுக்கல் மாவட்டத்தில், மாதாந்திர எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் அவர்களின் தலைமையில் வருகின்ற 24.06.2019-ஆம் தேதி மாலை 5.00 மணியளவில் நடைபெறவுள்ளது.

வெளியிடப்பட்ட தேதி : 11/06/2019

செ.வெ.எண்:-15/2019 நாள்:11.06.2019
திண்டுக்கல் மாவட்டம்

பத்திரிக்கை செய்தி

திண்டுக்கல் மாவட்டத்தில், மாதாந்திர எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் அவர்களின் தலைமையில் வருகின்ற 24.06.2019-ஆம் தேதி மாலை 5.00 மணியளவில் நடைபெறவுள்ளது.

இக்கூட்டத்தில் மாவட்ட எரிவாயு நிறுவனங்களின் விற்பனை மேலாளர்கள் மற்றும் மாவட்டத்திலுள்ள எரிவாயு முகவர்கள் கலந்துகொள்ள உள்ளனர். அதுசமயம் எரிவாயு நுகர்வேர்கள் மேற்படி மாதாந்திர எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டத்தில் கலந்துகொண்டு தங்களது கருத்துகள் மற்றும் கோரிக்கைகளை தெரிவித்து தீர்வு கண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.டி.ஜி.வினய், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.