மூடு

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஊரக வளர்ச்சித்துறை மற்றும் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டிலுள்ள அனைத்து நீர்நிலைகளின் முழு விபரங்களை பொதுமக்கள் அறிந்து கொள்ளும் பொருட்டு, திண்டுக்கல் மாவட்ட இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

வெளியிடப்பட்ட தேதி : 12/06/2019

செ.வெ.எண்:- 18/2019 நாள்:- 12.06.2019
திண்டுக்கல் மாவட்டம்

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஊரக வளர்ச்சித்துறை மற்றும் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டிலுள்ள அனைத்து நீர்நிலைகளின் முழு விபரங்களை பொதுமக்கள் அறிந்து கொள்ளும் பொருட்டு, திண்டுக்கல் மாவட்ட இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

பொதுமக்கள் தங்களது கிராமங்களில் உள்ள நீராதாரங்களை பாதுகாக்கவும், ஆக்கிரமிப்புகள் ஏற்படின், அரசுக்கு உடனுக்குடன் தகவல் அளித்து ஆக்கிரமிப்புகள் அகற்றத்திற்கு உறுதுணையாக இருக்க வேண்டும்-மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.டி.ஜி.வினய்.இ.ஆ.ப அவர்கள் தகவல்

திண்டுக்கல் மாவட்டத்தில் நீர் நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, தூர்ந்து போன உள்ள பல்வேறு நீர்நிலைகளை மீட்டெடுத்து பாதுகாப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகள் திண்டுக்கல் மாவட்ட நிர்வாகத்தினால் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் காரணமாக இதுவரை பொதுப்பணித்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறையின் பராமரிப்பில் உள்ள 637 குளங்கள் சர்வே செய்யப்பட்டு 158.91.37 ஹெக்டேர் (393 ஏக்கர்) பரப்பளவில் மேற்கொள்ளப்பட்டிருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றம் செய்யப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள குளங்கள், வாய்க்கால்கள் ஆகியவற்றை அரசு மற்றும் தனியார் பங்களிப்புடன் சுமார் 200 கிலோமீட்டர் தூரத்திற்கும் மேற்பட்ட வரத்து மற்றும் போக்கு வாய்க்கால்கள் மற்றும் 338 எண்ணிக்கையிலான குளங்கள் தூர்வாரி புதுப்பிக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் தங்கு தடையற்ற நீர் வரத்து ஏற்படுவதுடன், நிலத்தடி நீர் மட்டமும் உயர்ந்துள்ளது.

அத்துடன் திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள அனைத்து குளங்களின் அமைவிடம், குளத்தின் தன்மை, மொத்தப்பரப்பு, சர்வே எண், எல்லை விபரம் ஆகியவை அனைத்து பொதுமக்களும் தெரிந்து கொள்ளும் வகையில், அனைத்துக் குளங்களுக்கும் எல்லைக்கற்கள் நிறுவப்பட்டு, ஒவ்வொரு குளத்திற்கும் தனித்தனியே தகவல் பலகை அமைக்கப்பட்டு வருகிறது. மேலும், குளங்களின் எல்லையில் எல்லைக்கற்கள் நிறுவப்படுள்ளதை புPளு ஊழ-ழுசனiயெவநள எடுக்கப்பட்டு, நீர்நிலைகளை பாதுகாக்க நிரந்தரமாக ஆவணப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும், திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஊரக வளர்ச்சித்துறை மற்றும் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டிலுள்ள அனைத்து நீர்நிலைகளின் முழு விபரங்கள் https://dindigul.nic.in என்ற திண்டுக்கல் மாவட்ட இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

மேற்குறித்த இணைய தளத்திற்கு சென்று மாவட்டத்திலுள்ள நீர்நிலைகளின் விவரங்களை பொதுநல அமைப்புகள் பொதுமக்கள் என அனைவரும் தெரிந்து கொள்வதோடு, மேற்படி தகவல்களின் அடிப்படையில் தமது கிராமங்களில் உள்ள நீராதாரங்களை பாதுகாக்கவும், ஆக்கிரமிப்புகள் ஏற்படின் அரசுக்கு உடனுக்குடன் தகவல் அளித்து ஆக்கிரமிப்புகள் அகற்றத்திற்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.டி.ஜி.வினய்.இ.ஆ.ப அவர்கள் தெரிவித்துள்ளார்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.