மூடு

திண்டுக்கல் மாவட்டத்தில் 50 சதவீதத்திற்கும் குறைவான வாக்குப்பதிவு நடைபெற்ற வாக்குச்சாவடிக்குட்பட்ட பகுதி பொதுமக்களிடையே வாக்குப்பதிவு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

வெளியிடப்பட்ட தேதி : 09/09/2024
.

செ.வெ.எண்:-13/2024

நாள்:-06.09.2024

திண்டுக்கல் மாவட்டம்

திண்டுக்கல் மாவட்டத்தில் 50 சதவீதத்திற்கும் குறைவான வாக்குப்பதிவு நடைபெற்ற வாக்குச்சாவடிக்குட்பட்ட பகுதி பொதுமக்களிடையே வாக்குப்பதிவு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்டத்தில் 50 சதவீதத்திற்கும் குறைவான வாக்குப்பதிவு நடைபெற்ற வாக்குச்சாவடிக்குட்பட்ட பகுதி பொதுமக்களிடையே வாக்குப்பதிவு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று(06.09.2024) நடைபெற்றது.

இக்கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்ததாவது:-

இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவின்பேரில், 01.01.2025-ஆம் தேதியை தகுதி நாளாகக்கொண்டு புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் பணிகள் திண்டுக்கல் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

திண்டுக்கல் மாவட்டத்தில் 50 சதவீதத்திற்கும் குறைவாக வாக்குப்பதிவு நடைபெற்ற வாக்குச்சாவடிக்குட்பட்ட பகுதி பொதுமக்களிடையே வாக்குப்பதிவு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி, வாக்குப்பதிவை அதிகரிக்கும் வகையில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று மேற்கொள்ளப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டத்தில் 2021-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின்போது, பழனி சட்டமன்ற தொகுதியில் 5 வாக்குச்சாவடிகளிலும், நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் 2 வாக்குச்சாவடிகளிலும், திண்டுக்கல் சட்டமன்ற தொகுதியில் 6 வாக்குச்சாவடிகளிலும், வேடசந்துார் சட்டமன்ற தொகுதியில் ஒரு வாக்குச்சாவடியிலும் என மொத்தம் 14 வாக்குச்சாவடிகளில் 50 சதவீதத்திற்கும் குறைவான வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது.

குறைந்த வாக்குப்பதிவு நடைபெற்ற பகுதிகளில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் பணிகள் பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம் போன்ற பணிகளை இணையதளம் வழியாக 06.09.2024 வரை மேற்கொள்ளப்பட்டன. அதனைத்தொடர்ந்து வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீடுவீடாகச் சென்று 18.10.2024 வரை வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணிகள் மேற்கொள்ள உள்ளனர். அதன் பின்னர் ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்,

வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீடுவீடாகச் சென்று சரிபார்ப்பு பணி மேற்கொள்ளும்போது, வாக்குச்சாவடிகளை திருத்தியமைத்தல், மறு சீரமைத்தல், வாக்காளர் பட்டியல் மற்றும் வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையில் உள்ள முரண்பாடுகளை நீக்குதல், பிரிவு, பகுதிகளை மறு சீரமைத்தல், இடைவெளிகளை கண்டறிதல், அத்தகைய இடைவெளிகளைக் குறைப்பதற்கான உத்திகளையும் காலக்கெடுவையும் இறுதி செய்தல், வாக்காளர் பட்டியலில் சேர தகுதிவாய்ந்த வாக்காளர்களின் விபரங்கள், இடம் பெயர்ந்த வாக்காளர்கள், இடம்பெயர்ந்த வாக்காளர்கள், வாக்காளர் பட்டியலில் திருத்தங்கள் போன்ற பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

கள ஆய்வு முடிவு பெற்ற பின்னர் ஒவ்வொரு வாக்குச்சாவடி நிலை அலுவலர் மற்றும் வாக்காளர் பதிவு அலுவலர் விவரங்களை விடுதல் ஏதுமின்றி சான்று அளிக்க வேண்டும், என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில், தேர்தல் வட்டாட்சியர் திரு.முத்துராமன் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள், வாக்காளர் பதிவு அலுவலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.