மூடு

திண்டுக்கல் மாவட்டத்தில், 12வது புத்தகத் திருவிழா நடைபெற உள்ளதை முன்னிட்டு, வாகனப் பிரச்சாரத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்து, மாணவ, மாணவிகளுக்கு இலவச சேமிப்பு உண்டியல்களை வழங்கினார்.

வெளியிடப்பட்ட தேதி : 10/06/2025
.

செ.வெ.எண்:-23/2025

நாள்:-09.06.2025

திண்டுக்கல் மாவட்டம்

திண்டுக்கல் மாவட்டத்தில், 12வது புத்தகத் திருவிழா நடைபெற உள்ளதை முன்னிட்டு, வாகனப் பிரச்சாரத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்து, மாணவ, மாணவிகளுக்கு இலவச சேமிப்பு உண்டியல்களை வழங்கினார்.

திண்டுக்கல் மாவட்டத்தில் 12வது புத்தகத் திருவிழா நடைபெற உள்ளதை முன்னிட்டு, வாகனப் பிரச்சாரத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று(09.06.2025) கொடியசைத்து தொடங்கி வைத்து, மாணவ, மாணவிகளுக்கு இலவச சேமிப்பு உண்டியல்களை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:-

திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம், பொது நுாலக இயக்ககம் மற்றும் திண்டுக்கல் இலக்கியக் களம் ஆகியவை சார்பில் திண்டுக்கல் மாவட்டத்தில் 12வது புத்தகத் திருவிழா திண்டுக்கல் அங்கு விலாஸ் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் 28.08.2025 அன்று தொடங்கி 07.09.2025 வரை நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு, புத்தகத் திருவிழா தொடர்பான விழிப்புணர்வு வாகன பிரச்சாரம் இன்று(09.06.2025) தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

மேலும், மாணவ, மாணவிகளிடையே புத்தக வாசிப்பில் ஆர்வத்தை ஏற்படுத்தும் விதமாகவும், சிறுகசிறுக பணம் சேமித்து அவர்களே புத்தகம் வாங்கும் பழக்கத்தை ஊக்குவிக்கும் விதமாக மாவட்டம் முழுவதும் மாணவ, மாணவிகளுக்கு சுமார் 32,000 உண்டியல்கள் வழங்கப்படவுள்ளது. அதன்படி, மாணவ, மாணவிகளுக்கு இலவச சேமிப்பு உண்டியல்கள் வழங்கும் பணி இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இன்றையதினம் மட்டும் சுமார் 2500 உண்டியல்கள் வழங்கப்படுகிறது. இந்த சேமிப்பு பணத்திலிருந்து புத்தகம் வாங்கும் மாணவ, மாணவிகளுக்கு சலுகை விலையில் புத்தகங்கள் வழங்கப்படவுள்ளது.

இந்த ஆண்டு புத்தகத் திருவிழா இடநெருக்கடி இன்றி, வாகனப் போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வகையில், அனைவரும் எவ்வித சிரமமுமின்றி வந்து செல்லும் வகையில் அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன, என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி இரா.ஜெயபாரதி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது) திரு.மு.கோட்டைக்குமார், திண்டுக்கல் இலக்கிய களம் தலைவர் முனைவர் மனோகரன், பேராசிரியர் எஸ்.எஸ்.நாகராஜன் நினைவு அறிவியல் அறக்கட்டளை திரு.டொமினிக், ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.

.

.

.

.