மூடு

திண்டுக்கல் மாவட்டத்தில் தென்னையானது 30,498 ஹெக்டேர் அளவில் பயிரிடப்பட்டு வருகிறது. அதில் 3,58,923.625 இலட்சம் மெ.டன் தேங்காய் உற்பத்தி செய்யப்பட்டு 3,40,977 இலட்சம் மெ.டன் விற்பனை உபரி ஏற்படுகிறது.

வெளியிடப்பட்ட தேதி : 12/07/2019

செ.வெ.எண்:-38/2019 நாள்:- 12.07.2019

திண்டுக்கல் மாவட்டம்

பத்திரிக்கை செய்தி

திண்டுக்கல் மாவட்டத்தில் தென்னையானது 30,498 ஹெக்டேர் அளவில் பரியிடப்பட்டு வருகிறது. அதில் 3,58,923.625 இலட்சம் மெ.டன் தேங்காய் உற்பத்தி செய்யப்பட்டு 3,40,977 இலட்சம் மெ.டன் விற்பனை உபரி ஏற்படுகிறது.

தற்போது தேங்காய் பருப்பின் வெளிச்சந்தையின் விலையானது குவின்டால் ஒன்றுக்கு தொகை ரூ.8,200ஃ- முதல் ரூ.8,500/- வரை நிலவி வருகிறது. வெளிச்சந்தை விலையானது மத்திய அரசால் அவ்வப்போது நிர்ணயம் செய்யப்பட்டு வரும் குறைந்தபட்ச ஆதார விலையை விட குறைவாக இருப்பதால் தமிழ்நாடு அரசு மத்திய அரசின் உதவியுடன் தென்னை அதிகம் பயிரிடக்கூடிய 20 மாவட்டங்களில் அரவை கொப்பரைக்கான குறைந்தபட்ச ஆதார விலையான குவின்டால் ஒன்றுக்கு ரூ.9,521ஃ- வீதம் நிர்ணயம் செய்து கொள்முதல் செய்ய ஏற்பாடு செய்துள்ளது. அதனடிப்படையில் திண்டுக்கல் மாவட்டத்தில் பழனி, நத்தம் மற்றும் வத்தலகுண்டு ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் கொள்முதல் மையங்கள் ஜுலை – 2019 முதல் ஆறு மாதங்களுக்கு செயல்பட உத்தரவிடப்பட்டுள்ளது.

மேற்படி, கொள்முதலுக்கு அரவை கொப்பரை கொண்டு வரும் விவசாயிகள் நில உரிமைக்கான அசல் சிட்டா மற்றும் அடங்கலும், ஆதார் மற்றும் வங்கி கணக்கு புத்தகத்தின் நகலும் கொள்முதல் மையங்களில் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் கொண்டு வரக்கூடிய அரவை கொப்பரையின் ஈரப்பதமானது 6 சதவீதங்களுக்கு குறைவாகவும், பூஞ்சானம் மற்றும் சுருக்கம் நிறைந்த கொப்பரைகள் எண்ணிக்கையில் 10 சதவீதங்களுக்கு குறைவாகவும், அயல் பொருட்கள் மற்றும் சில்லுகள் 10 சதவீதத்திற்கு குறைவாகவும் இருக்க வேண்டும் என தரக்குறியீடு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேற்சொன்ன காலத்தில் ஒரு விவசாயிடமிருந்து ஒரு ஏக்கருக்கு அதிகபட்சமாக 191 கிலோ மட்டும் கொள்முதல் செய்யப்படுமென இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது.

எனவே, திண்டுக்கல் மாவட்ட விவசாயிகள் மேற்சொன்ன வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.மு.விஜயலட்சுமி, இ.அ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்