திண்டுக்கல் மாவட்டத்தில் வாக்காளர் சரிபார்ப்பு திட்டம் 01.09.2019-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. வாக்காளர் பட்டியலில் அவரவர் பதிவு சரியாக உள்ளதா என்பதை வாக்காளர்களே முன்வந்து எளிதாக உடனுக்குடன் சரிபார்த்துக் கொள்வதற்காக இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

வெளியிடப்பட்ட தேதி : 05/09/2019

செ.வெ.எண்:07/2019 நாள்:04.09.2019
திண்டுக்கல் மாவட்டம்
பத்திரிக்கை செய்தி

திண்டுக்கல் மாவட்டத்தில் வாக்காளர் சரிபார்ப்பு திட்டம் 01.09.2019-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. வாக்காளர் பட்டியலில் அவரவர் பதிவு சரியாக உள்ளதா என்பதை வாக்காளர்களே முன்வந்து எளிதாக உடனுக்குடன் சரிபார்த்துக் கொள்வதற்காக இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

05.09.2019-ஆம் தேதி ஆசிரியர் தினத்தை முன்னிட்டு, ஆசிரிய/ஆசிரியைகளின் வசதிக்காக திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி / கல்லூரிகளிலும் 05.09.2019-ஆம் தேதி வியாழக்கிழமை காலை 10.30 மணியிலிருந்து மாலை 05.00 மணி வரை சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.

எனவே, வாக்காளர் பட்டியலில் பதிவு சரிபார்ப்பதற்காக, திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள பள்ளி / கல்லூரி ஆசிரிய /ஆசிரியைகள் அனைவரும் 05.09.2019-ஆம் தேதி பணிக்கு வரும்போது தங்களது வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை நகலை எடுத்து வந்தாலோ அல்லது வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை எண்ணைக் குறித்து வந்தாலோ, மேற்படி முகாமில் அவரவர் பள்ளி / கல்லூரியிலேயே பதிவு சரிபார்த்து தரப்படும். வாக்களிப்பது நமது உரிமை, வாக்காளர் பட்டியலை சரிபார்க்க வேண்டியது நமது கடமை என மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சி;த்தலைவர் திருமதி மு.விஜயலட்சுமி,இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.