மூடு

திண்டுக்கல் மாவட்டத்தில் 144 தடைச்சட்டம் இன்று(24.03.2020) மாலை 6.00 மணி முதல் அமல் – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மு.விஜயலட்சுமி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

வெளியிடப்பட்ட தேதி : 24/03/2020

செ.வெ.எண்:-30/2020 நாள்:24.03.2020
திண்டுக்கல் மாவட்டம்

திண்டுக்கல் மாவட்டத்தில் 144 தடைச்சட்டம் இன்று(24.03.2020) மாலை 6.00 மணி முதல் அமல் – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மு.விஜயலட்சுமி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

கொரோனா வைரஸ் நோயை முற்றிலும் தடுக்கும் விதமாக சமூக தனிமைப்படுத்துதலை தீவிரப்படுத்தும் வகையில், திண்டுக்கல் மாவட்டத்தில்
Cr.P.C.-144 ன் கீழ் திண்டுக்கல் மாவட்டத்தில் ஊரடங்கு இன்று(24.03.2020) மாலை 6.00 மணி முதல் அமல்படுத்த திண்டுக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மு.விஜயலட்சுமி, இ.ஆ.ப., அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள்.

இத்தடைச்சட்டத்தின்படி பொது இடங்களில் 5 நபர்களுக்கு மேல் கூட்டமாக சேர்ந்திடல் கூடாது.

பொது மற்றும் தனியார் போக்குவரத்துகளான ஆட்டோக்கள், வாடகை கார்கள்(டாக்சி) ஆகிய போக்குவரத்திற்கு தடை செய்யப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்கள் (பால், காய்கறிகள் உள்ளிட்ட) போக்குவரத்துகளுக்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

அத்தியாவசிய பொருட்களான காய்கறி கடை, மளிகை கடை, மீன், இறைச்சிக்கடைகள், மருந்தகங்கள், பால் மற்றும் நியாயவிலைக் கடைகள்; செயல்படும்.

உணவகங்களில் அமர்ந்து உண்பது தடை செய்யப்பட்டுள்ளது. பார்சல் முறையில் உணவுகள் வழங்கலாம்.

திண்டுக்கல் மாவட்டத்தில் 144 தடைச்சட்டம் இன்று(24.03.2020) மாலை 6.00 மணி முதல் 01.04.2020 காலை 6.00 மணி வரை அமலில் இருக்கும். பொதுமக்கள் கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுக்கும் வகையில் வெளியிடங்களுக்கு செல்லாமல் வீட்டில் இருந்து ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மு.விஜயலட்சுமி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

—————————————————————————————————————————————————————————————-
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.
—————————————————————————————————————————————————————————————-