மூடு

திண்டுக்கல் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சுருக்க முறை திருத்தப் பணிகள் குறித்து சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன- மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

வெளியிடப்பட்ட தேதி : 15/09/2021
.

செ.வெ.எண்:-27/2021

நாள்:-15.09.2021

திண்டுக்கல் மாவட்டம்

திண்டுக்கல் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சுருக்க முறை திருத்தப் பணிகள் குறித்து சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன- மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், அனைத்து அரசியல் கட்சி பிரதிநிகளுடன் 2022-ம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியல் சிறப்புச் சுருக்கத் திருத்தம் மற்றும் வாக்குச்சாவடி மையங்கள் சீரமைப்பு தொடர்பான கலந்தாலோசனைக் கூட்டம் இன்று (15.09.2021) நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:-

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளில் மொத்தம் 2103 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளன. இவற்றில் தொகுதி வாரியாக பழனி-323, ஒட்டன்சத்திரம் -278, ஆத்தூர் – 318, நிலக்கோட்டை -265, நத்தம் -323, திண்டுக்கல்-287, வேடசந்தூர்-309 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

இதில் வாக்குச்சாவடிகளின் பெயர் மாற்றம், இடமாற்றம், 1,500 வாக்காளர்களுக்கு மிகையாக இருப்பின் அந்த வாக்குச்சாவடியைப் பிரித்தல் மற்றும் வாக்காளர்களின் இருப்பிடத்தில் இருந்து 2 கி.மீட்டர் தூரத்திற்கு அதிகமாக உள்ள வாக்குச்சாவடிகளைப் பிரித்து புதிதாக வாக்குச்சாவடிகளை உருவாக்குதல் போன்ற விபரங்கள் இருப்பின், அதனை சம்மந்தப்பட்ட வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலரிடம் எழுத்து மூலமாக அரசியல் கட்சி பிரதிநிதிகள் தெரிவிக்க வேண்டும்.

வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்தப் பணிகள் வரும் 2022ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதியை தகுதி நாளாகக் கொண்டு வாக்காளர் பட்டியலை செம்மைப்படுத்தும் பணிகள் நடைபெற உள்ளது. மேலும் வாக்காளர் பட்டியல் சுருக்க முறைத் திருத்தப் பணிகள் குறித்த சிறப்பு முகாம்கள் வரும் நவம்பர் மாதம் 13 மற்றும் 14-ஆம் தேதிகளிலும் (சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமை), 27 மற்றும் 28-ஆம் தேதிகளிலும் (சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமை) என 4 நாட்கள் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன. இதில் வாக்காளர் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கல், பெயர் திருத்தம், முகவரி மாற்றம் போன்றவற்றிற்கான விண்ணப்பங்கள் பெறப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்கள்.

இந்த கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி வே.லதா, கூடுதல் ஆட்சியர்(வளர்ச்சி) திரு.ச.தினேஷ்குமார்,இ.ஆ.ப., மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது) திரு.சி.மாறன், வட்டாட்சியர்கள் மற்றும் அரசியல் கட்சி பிரதிநிதிகள் பலர் கலந்துகொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.