திண்டுக்கல் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி வாரியாக வாக்காளர்கள் விவரம்
செ.வெ.எண்:-37/2022
நாள்:16.02.2022
சென்னை தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய சுற்றறிக்கையின்படி, திண்டுக்கல் மாவட்டத்தில் நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்காக, 1 மாநகராட்சி, 3 நகராட்சிகள் மற்றும் 23 பேரூராட்சிகளுக்குரிய புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல்கள் தொடர்புடைய உள்ளாட்சி வாக்காளர் பதிவு அலுவலர்களால் 09.12.2021 முதல் சம்மந்தப்பட்ட நகர்ப்புற உள்ளாட்சி அலுவலகங்களில் பொதுமக்கள் பார்வைக்கு ஏற்கனவே வெளியீடு செய்யப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி வாரியாக வாக்காளர்கள் விவரம்:-
திண்டுக்கல் மாவட்டத்தில் மொத்த வாக்காளர்கள் – 6,12,880 ஆகும். இதில் ஆண்; வாக்காளர்கள்-2,96,745, பெண் வாக்காளர்கள்- 3,16,060 மற்றும் மூன்றாம் பாலினம்- 75 நபர்கள் உள்ளனர்.
திண்டுக்கல் மாநகராட்சியின் மொத்த வாக்காளர்கள் -1,81,670 ஆகும். இதில் ஆண் வாக்காளர்கள்- 88,112, பெண் வாக்காளர்கள்- 93,524 மற்றும் மூன்றாம் பாலினம்-34 நபர்கள் உள்ளனர்.
கொடைக்கானல் நகராட்சியின் மொத்த வாக்காளர்கள் – 29,383 ஆகும். இதில் ஆண் வாக்காளர்கள் -14,219, பெண் வாக்காளர்கள் -15,162 மற்றும் மூன்றாம் பாலினம் -2 நபர்கள் உள்ளனர்.
ஒட்டன்சத்திரம் நகராட்சியின் மொத்த வாக்காளர்கள் -28068 ஆகும். இதில் ஆண் வாக்காளர்கள் -13,641, பெண் வாக்காளர்கள் -14,424 மற்றும் மூன்றாம் பாலினம்-3 நபர்கள் உள்ளனர்.
பழனி நகராட்சியின் மொத்த வாக்காளர்கள் -62,214 ஆகும். இதில் ஆண் வாக்காளர்கள்- 29,780, பெண் வாக்காளர்கள் -32,420 மற்றும் மூன்றாம் பாலினம் -14 நபர்கள் உள்ளனர்.
23 பேரூராட்சிகளில் மொத்த வாக்காளர்கள் – 3,11,545 ஆகும். இதில் ஆண் வாக்காளர்கள் – 1,50,993, பெண் வாக்காளர்கள் – 1,60,530 மற்றும் மூன்றாம் பாலினம் – 22 நபர்கள் உள்ளனர்.
இவ்வாறு மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.