மூடு

திண்டுக்கல் மாவட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் – தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம்

வெளியிடப்பட்ட தேதி : 27/05/2022

செ.வெ.எண்:-47/2022

நாள்:25.05.2022

திண்டுக்கல் மாவட்டம்

திண்டுக்கல் மாவட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் சேகரிப்பது முதல் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக கிடங்குகளில் கண்டுமுதல்(அரவை செய்த அரிசி) அரிசியினை ஒப்படைப்பது வரையிலான விநியோக சங்கிலி மேலாண்மை திட்டத்தில் கழக அரவை முகவர்களை (முழுநேர, பகுதிநேரம்) மற்றும் கழகத்தில் இணையாத தனியார் அரவை ஆலைகளை ஈடுபடுத்த தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம் முடிவு செய்துள்ளது.

எனவே, இந்நிகழ்வில ஆர்வமுடைய தனியார் அரவை ஆலைகள் தங்களது விருப்ப கடிதத்தினை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மண்டல அலுவலகத்தில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மேலும் விபரங்களுக்கு, “மண்டல மேலாளர், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் (ஒருங்கிணைந்த நீதிமன்றங்கள் எதிரில்), திண்டுக்கல் அலுவலகத்தை நேரிலோ அல்லது 9442607767 என்ற கைப்பேசி எண்ணிலோ தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.