மூடு

திண்டுக்கல் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி முகமையின் மூலம் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளை சென்னை ஊரக வளர்ச்சி முகமை கூடுதல் இயக்குநர் (தேசிய ஊரக வேலை உறுதி திட்டம்) திரு.எஸ்.எஸ்.குமார்,இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

வெளியிடப்பட்ட தேதி : 28/05/2022
.

செ.வெ.எண்:-52/2022

நாள்:27.05.2022

திண்டுக்கல் மாவட்டம்

திண்டுக்கல் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி முகமையின் மூலம் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளை சென்னை ஊரக வளர்ச்சி முகமை கூடுதல் இயக்குநர் (தேசிய ஊரக வேலை உறுதி திட்டம்) திரு.எஸ்.எஸ்.குமார்,இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

திண்டுக்கல் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி முகமையின் மூலம் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளை சென்னை ஊரக வளர்ச்சி முகமை கூடுதல் இயக்குநர் (தேசிய ஊரக வேலை உறுதி திட்டம்) திரு.எஸ்.எஸ்.குமார்,இ.ஆ.ப., அவர்கள், கூடுதல் ஆட்சியர்(வளர்ச்சி) திரு.ச.தினேஷ்குமார்,இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் இன்று(27.05.2022) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

சென்னை ஊரக வளர்ச்சி முகமை கூடுதல் இயக்குநர் (தேசிய ஊரக வேலை உறுதி திட்டம்) திரு.எஸ்.எஸ்.குமார்,இ.ஆ.ப., அவர்கள், திண்டுக்கல் மாவட்டம், தோட்டனூத்து கிராமத்தில் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம் ரூ.17.17 கோடி மதிப்பீட்டில் 321 வீடுகள் கட்டப்பட்டு இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருவதை ஆய்வு செய்தார். பணிகளை விரைந்து முடிக்க வேண்டுமென அறிவுறுத்தினார்.

அதனை தொடர்ந்து, தோட்டனூத்து பகுதியில் பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தின்கீழ் ரூ.2.4 இலட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் பணிகளையும், அப்பகுதியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின்கீழ் ரூ.10.00 இலட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் 100 நாள் வேலை நடைபெற்று வரும் பணிகளையும் ஆய்வு செய்தார். பணியாளர்கள் வருகை பதிவேட்டினை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மேலும், திண்டுக்கல் கிழக்கு வட்;டம், சிறுமலை ஊராட்சிக்குட்பட்ட சிறுமலை பழையூர் பகுதியில் (NRGB) திட்டத்தின்கீழ் தடுப்பணையுடன் கூடிய நீர்வீழ்ச்சி ரூ.52 இலட்சத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிக்கும் வகையில் செயல்படுத்தப்பட்டுள்ள செயற்கை அருவியினை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.

அதனை தொடர்ந்து, ரெட்டியார்சத்திரம் ஒன்றியம் பொன்னிமாந்துரையில் ரூ.32.00 இலட்சம் மதிப்பீட்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின்கீழ் அடர் குறுங்காடுகள் அமைக்கபட்டுள்ளதை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள். அங்கு மரக்கன்றுகளை நடவு செய்தார்.

மேலும், ரெட்டியார்சத்திரம் ஒன்றியம் கொத்தபுளி கிராமத்தில் தேசிய கிராம சுயராஜ்ய திட்டத்தின்கீழ் ரூ.23.53 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் ஊராட்சி மன்ற அலுவலக கட்டடப்பணிகளையும், அதே கொத்தபுளி கிராமத்தில் கிராமத்தில் கனிமவள பங்களிப்பு நிதி ரூ.18.3 இலட்சம் மதிப்பீட்டில் 60,000 லிட்டர் மேல்நிலை தொட்டி அமைக்கும் பணிகளையும் என மொத்தம் 7 பகுதிகளில் ரூ.18.55 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.இந்த ஆய்வின் போது நடைபெற்று வரும் பணிகளை குறித்த காலத்திற்குள் தரமான முறையில் செய்து முடிக்க வேண்டுமென உத்தரவிட்டார்.

இந்த ஆய்வின்போது, ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் திருமதி.அனுராதா, உதவி செயற்பொறியாளர்கள் திருமதி.விஜயசித்ரா, திரு.ஹாஜகான், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஒன்றிய பொறியாளர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.