திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கீரனூர் பேரூராட்சி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியர் குடியிருப்பு மற்றும் மருந்தக வைப்பறை கட்டிடம் திறப்பு விழா மற்றும் பொது கழிப்பறை அடிக்கல் நாட்டிம் விழா மற்றும் கீரனூர் பேரூராட்சியில் புதியதாக இரண்டு நியாயவிலைக்கடை கட்டிடம் மற்றும் மேல்கரைப்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் 4 வகுப்பறைகள் கட்டுவதற்கு மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் அடிக்கல் நாட்டி பணிகளை துவக்கி வைத்தார்.

செ.வெ.எண்:-42/2023
நாள்:19.01.2023
திண்டுக்கல் மாவட்டம்
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கீரனூர் பேரூராட்சி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியர் குடியிருப்பு மற்றும் மருந்தக வைப்பறை கட்டிடம் திறப்பு விழா மற்றும் பொது கழிப்பறை அடிக்கல் நாட்டிம் விழா மற்றும் கீரனூர் பேரூராட்சியில் புதியதாக இரண்டு நியாயவிலைக்கடை கட்டிடம் மற்றும் மேல்கரைப்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் 4 வகுப்பறைகள் கட்டுவதற்கு மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் அடிக்கல் நாட்டி பணிகளை துவக்கி வைத்தார்.
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கீரனூர் பேரூராட்சி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியர் குடியிருப்பு கட்டிட திறப்பு விழா மற்றும் மருந்தக வைப்பறை கட்டிடம், பொது கழிப்பறை அடிக்கல் நாட்டிம் விழா மற்றும் கீரனூர் பேரூராட்சியில் புதியதாக இரண்டு நியாயவிலைக்கடை கட்டிடம் மற்றும் மேல்கரைப்பட்டி ஊராட்சி பள்ளிகளுக்கு 4 வகுப்பறைகள் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டும் விழா இன்று(19.01.2023) நடைபெற்றது.
இவ்விழாவில் மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் கலந்து கொண்டு கீரனூர் பேரூராட்சி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியர் குடியிருப்பு கட்டிடத்தினை திறந்து வைத்து, மருந்தக வைப்பறை கட்டிடம், பொது கழிப்பறை கட்டிடம் கீரனூர் பேரூராட்சியில் புதியதாக இரண்டு நியாயவிலைக்கடை புதிய கட்டிடம், மற்றும் மேல்கரைப்பட்டி ஊராட்சி பள்ளிகளுக்கு 4 வகுப்பறைகள் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டி வைத்து பணிகளை துவக்கி வைத்தார்.
இவ்விழாவில் மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் பேசியதாவது:-
கீரனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டில் கட்டிமுடிக்கபட்பட்ட செவிலியர் குடியிருப்பு கட்டிடம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. மேலும், ரூ.49.65 இலட்சம் மதிப்பீட்டில் மருந்தகம் வைப்பறை கட்டிடம், ரூ.9.8 இலட்சம் மதிப்பீட்டில் பொது கழிப்பறை கட்டிடம், ரூ.10 இலட்சம் மதிப்பீட்டில் புதிய நியாயவிலைக் கடை கட்டிடம், ரூ.10 இலட்சம் மதிப்பீட்டில் கீரனூர் 200 வீடு காலனியில் புதிய நியாய விலைக் கடை கட்டிடம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டு பணிகளை துவங்கி வைக்கப்பட்டுள்ளது.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பொறுப்பேற்ற பின்பு மக்களுக்கு தேவையான அடிப்படை தேவைகளை நிறைவேற்றி வேண்டும் என்ற எண்ணத்தில் ஒரு சிறப்பான ஆட்சியை தமிழகத்தில் நடத்தி வருகிறார். குறிப்பாக இந்தியாவில் தலைசிறந்த முதலமைச்சர் என்று பெயர் எடுப்பதை விட, இந்தியாவில் தமிழகம் தலைசிறந்த மாநிலமாக தமிழ்நாடு வர வேண்டும் என்பதற்காக, மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் ஒவ்வொரு திட்டங்களையும் அளவுகோள் எடுத்து வளர்ச்சி திட்டத்தில் இந்தியாவில் தலைசிறந்த மாநிலமாக தமிழ்நாடு அரசு முதலிடத்தை பெற்று இருக்கிறது.
கீரனூர் பேரூராட்சியில் 200 வீடு காலனியில் ரூ.10 இலட்சம் மதிப்பீட்டில் புதிய நியாயவிலைக் கடை கட்டிடம் கட்டுவதற்கு பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. இந்த விடுகளுக்கு தேவையான சாலைகள், கழிவுநீர் வாய்க்கால் கட்டுவதற்கு தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின் மூலமாக மதிப்பீடு தயார் செய்யப்பட்டு வருகிறது. மதிப்பீடு எடுக்கப்பட்ட பின்பு இப்பணிகள் நடைபெற நடவடிக்கை எடுக்கபட்டு, சீர் செய்து தரப்படும். கீரனூர் பேரூராட்சியில் 500 அடுக்குமாடி வீடுகள் கட்டுவதற்கு நிலம் வாங்கப்பட்டு, விலைப்புள்ளி கோரபட்டுள்ளது. விரைவில் இப்பணிகள் தொடங்கப்படும். இதனை தொடர்ந்து, இரண்டாவது தவணையாக மேலும், 500 அடுக்குமாடி வீடுகள் என மொத்தம் 1000 அடுக்கு மாடி வீடுகள் குடிசைமாற்று வாரியத்தின் மூலமாக கட்டிதரப்படும். கீரனூர் பேரூராட்சி அலுவலகத்திற்கு சொந்த கட்டிடம் கட்டுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். கீரனூர் பேரூராட்சி பகுதிக்கு கலைஞர் மேம்பாட்டு திட்டம் 2021-2022 திட்டத்தின்கீழ் பேருந்து அபிவிருத்தி திட்டத்தின்கீழ் ரூ.83 இலட்சம் மதிப்பீட்டில் பணிகள் நடைபெற்று வருகிறது. ஆம்ரூத் 2022-2023ஆம் ஆண்டு திட்டத்தில் பேரூராட்சி பகுதியில் 1 வார்டு, புதிய வார்டு பகுதிகளுக்கு புதிய பூங்கா அமைக்கும் பணி ரூ.20 இலட்சம் மதிப்பீட்டில் பணிகள் நடைபெறவுள்ளது. வளமீட்பு பூங்காவிற்கு ரூ.5 இலட்சம் மதிப்பீட்டில் மேல்கூறை அமைத்தல், கழிப்பறை கட்டுவதற்கு பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும், இந்தாண்டு கீரனூர் பேரூராட்சிக்கு ரூ.2 கோடி மதிப்பீட்டில் அனைத்து சாலைகளையும் அமைப்பதற்கு நிதிபெறப்பட்டுள்ளது. மேலும் கூடுதலாக ரூ.4 கோடியே 90 இலட்சம் மதிப்பீட்டில் அனைத்து சாலைகளையும் புதுப்பிப்பதற்கு மாண்புமிகு அமைச்சர் அவர்களிடத்தில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. அனுமதி கிடைக்க பெற்றவுடன் இப்பணிகள் தொடங்கப்படும்.
கீரனூர் பகுதி மக்களுக்கு குடிநீர் வழங்குவதற்காக சட்டமன்ற வளர்ச்சி மேம்பாட்டு திட்டத்தின்கீழ் ஒரு சமுதாய கிணறு வெட்டப்பட்டு கடந்த காலத்தில் குடிநீர் வழங்கப்பட்டது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பொறுப்பேற்று கீரனூர் பேரூராட்சி, நெய்க்காரப்பட்டி பேரூராட்சி, பழனியில் உள்ள 20 ஊராட்சிகள், ஒட்டன்சத்திரம் தொகுதியில் உள்ள ஒட்டன்சத்திரம் நகராட்சி மற்றும் ஊராட்சிகளுக்கும் சுமார் ரூ.1000 கோடி மதிப்பீட்டில் புதியதாக காவேரி கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்துவதற்கு விரைவில் பணிகள் ஆரம்பிக்கப்படும். இந்தாண்டு தமிழகத்தில் 26 ஆரம்ப சுகாதார நிலையம் அமைப்பதற்கு மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அனுமதி வழங்கியுள்ளார். இதில் ஒட்டன்சத்திரம் மார்க்கம்பட்டியில் புதிய ஆரம்ப சுகாதார நிலையம் அமைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
தொடர்ந்து, மேல்கரைப்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் ரூ.63 இலட்சம் மதிப்பில் 4 வகுப்பறைகளுக்கு கட்டிடம் கட்டப்படுகிறது. மேலும், இப்பகுதியில் நபார்டு திட்டத்தின்கீழ் 5 வகுப்பறைகள் கட்டும் பணிகள் துவங்கப்பட்டுள்ளது. மேல்கரைப்பட்டி ஊராட்சி பகுதியில் ரூ.5.62 கோடி மதிப்பீட்டில் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது. பல்வேறு பள்ளிகளில் கட்டிடங்களை சீரமைப்பதற்காக நபார்டு திட்டத்தின்கீழும் மேலும் பல்வேறு கட்டிடங்கள் கட்ட நிதி ஒதுக்கீடு பெறப்பட்டு பணிகள் தொடங்கப்படவுள்ளது. பள்ளி மாணவர்கள் நல்ல முறையில் படிக்க வேண்டும். எண்ணங்கள் வானுயிர இருத்தல் வேண்டும். மாணவர்கள் சிறப்பாக கல்வி பயில வேண்டும் என மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அவர்கள் பேசினார்.
இவ்விழாவில், பழனி வருவாய் கோட்டாட்சியர் திரு.சிவக்குமார், மாவட்ட பேரூராட்சிகளின் உதவி செயற்பொறியாளர் திரு.இசக்கி, துணை இயக்குநர் சுகாதார பணிகள்(பழனி) மரு.அனிதா, மாவட்ட ஊராட்சிக்குழு துணைத்தலைவர் திரு.கா.பொன்ராஜ், தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றியத் தலைவர் திருமதி சத்தியபுவனா ராஜேந்திரன், கீரனூர் பேரூராட்சி தலைவர் திரு.கருப்புச்சாமி, துணைத்தலைவர் திரு.அப்துல்சுப்பு, செயல் அலுவலர் திருமதி.அங்குலெட்சுமி, வட்டார வளர்ச்சி அலுவலர் திருமதி.மணிமுத்து, திருமதி.சசிலா, மேல்கரைப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் திருமதி.வாசுகிதுரைராஜ், துணைத்தலைவர் சரவணன், மாவட்ட வழங்கல் அலுவலர் திரு.சரவணன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.